Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘அரசியல்’ Category

வெற்றி விழாப் பற்றி சில துணுக்குகள்….

*ஊர் வலத்தை முன்னிட்டு கடைகள் முழுதாக அடைக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு வழமையாக ஞாயிற்றுக் கிழமை என்பதால் பூட்டப்பட்டிருந்தது.

* வேனுக்கு மேல் ஏற்றி வெள்ளச் சேட், வெள்ளச் சாரன் அணிந்து அழைத்து வரப்பட்டார்.

* கடற்கரையில் இன்று 5000 ஆதரவாளர்களுக்கு மதிய சாப்பாடும் ஏற்பாடாகியிருந்தது. இதற்காக 35 மாடுகள் அறுக்கப்பட்டன.
* மார்கட் வீதியின் ஊடாகச் சென்ற ஊர்வலம் ரஊப் மெளலவியின் பள்ளியில் சற்று நேரம் இடை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது கூட்டம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
* தண்ணிடாங்கி வீதிக்கு அருகில் நடந்த கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

* காலை பத்து மணிக்கு மேல் வெற்றி ஊர்வலம் ஆரம்பித்தது.
கூட்டத்தின் இடையை மக்கள்….

* இப்போது ஈச்சம் மரம் காய்க்கத் தொடங்கியிருப்பதாகவும்.
* சரியான பெரிய பழமாக இருப்பதாக மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

Read Full Post »

— இலங்கையின் குறிப்பிடத்தக்க முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்களில் ஏபிஎம். இத்ரீஸ் குறிப்பிடத்தக்கவர்.
சில ஆண்டுகளுக்கு முன் பெருவெளியில் சஞ்சிகையில் வெளிவந்த நேர்காணலை இப்போது அவரது இணையத்தில் தொடராக பதிவேற்றம் செய்கிறார்கள். காலப் பொருத்தம் கருதி அரசியல் தொடர்பான இக்கேள்வியை நாம் இங்கு பதிவேற்றம் செய்கின்றோம், காத்தான்குடி நெட்–

இன்றைய முஸ்லிம் அரசியல் நிலை பற்றி உங்களின் பார்வை என்ன?

இலங்கை முஸ்லிம் அரசியல் அண்மைக்காலத்தில் நலிவடைந்தநிலையில் இருப்பதால்தான் பலரும் சொல்கிறார்கள். அதில் உண்மை இருக்கிறது. தென்கிழக்குப் பல்கலைக்கழக எழுச்சிக்குப் பின்னரும் சுனாமிக்குப் பின்னரும் இலங்கை முஸ்லிம் அரசியல் சூழலை நாம் பார்க்கின்ற போது அதன் செல்நெறி மிகவும் நலிவடைந்ததாக, திட்டமிட்டு சூறையாடப்படுவதாகத்தான் நான் உணர்கிறேன். மற்றொரு வகையில் நோக்குகின்ற போது முஸ்லிம் அரசியல் தலைமைகள் சுனாமிக்குப் பின்னரும், மூதூர் பலவந்த ஆக்கிரமிப்பு வெளியேற்றத்திற்குப் பின்னரம் சமூகத்தொண்டு நிறுவனங்களை அல்லது சீர்திருத்த நிறுவனங்களை நோக்கி இறங்கிவந்ததாகத்தான் நான் பார்க்கிறேன். இதை முஸ்லிம் அரசியலை அல்லது கட்சி அரசியலின் பின்னடைவாகக் கொள்கின்ற அதே நேரம் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் எழுச்சியாகக் கொள்ள முடியுமா? என்பது கேள்விக் குரிய விடயம்.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் மக்களின் கைகளுக்குச் சென்றிருக்கிறது என்று சிலர் அவதானிக்கிறார்கள். அதாவது முன்பு ஒற்றைத் தலைமையாக நீக்கமற நிறைந்திருந்த நிலைமாறி அத்தலைமை நிறைவேற்றத் தவறிய, நிரப்பாமல் விட்ட வெற்றிடங்களையும் பணிகளையும் மக்கள் தமது உள்ளுர்தலைமைகள், ஏஜென்டுகளைக் கொண்டு நிறைவேற்ற ஆரம்பத்திருக்கிறார்கள்.

எனினும் முஸ்லிம் கொள்கைவாத அரசியல் இன்னும் சரியாகக் கட்டப்படாத பலவீனமான சூழலில்தான் நாம் இருக்கிறோம். கட்சி அரசியலைத்தான் உண்மையான அரசியல் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறோம். கொள்கைவாத அரசியல் உருவானால்தான் பௌத்த பெருந்தேசியவாத பன்சலையை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியோடு நாம் பேரம்பேசவோ அல்லது சமமாக உட்கார்ந்து எமது விடயங்களை கதைக்கவும் முடியும். அதற்கான அடிக்கட்டுமான வேலைகளை பிற்படுத்தாமல் தொடங்கவேண்டி இருப்பதாக நான் கருதுகிறேன்.

இங்கு முஸ்லிம் கட்சிவாத அரசியல் என்னவென்றால் எங்கள் ராத்தாவின் வீட்டுக்கு முன்னால் ரோட்டுப் போட்டுத்தரனும். அப்படி என்றால் நாங்கள் உங்களுக்கு வோட்டுப்போடுவோம் என்பது. கொள்கைவாத அரசியல் என்பது யாருக்கிட்ட கேட்டு நீங்க பிரிச்சிங்க? பிரிக்கிறதுக்கான அதிகாரத்தைத் தந்தது யார்? இது எங்கள் பாரம்பரிய தாயகம். இதில் இரண்டுபேரும் சேர்ந்துதான் பிரிக்கிறதா? சேர்ந்து வாழ்றதா? என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இந்த இறைமையைப் பேசுவதற்கான இட்டுமையைத் தருவது. இந்தக் கொள்கைவாத அரசியலை காங்கிரஸ் இதுவரைக்கும் செய்யவில்லை. குறி்ப்பாக காங்கிரஸுக்கென்று தொடர்ச்சியான ஒரு கொள்கை விளக்கப் பத்திரிகையோ, துண்டுப்பிரசுரமோ அல்லது ஒலிநாடாவோ பள்ளிவாசலில் ஒரு குத்பா பிரசங்கமோ கூட இல்லை.

மறைந்த தலைவர் அவர்களும் வெகுஜனப் போராட்டங்களாக சிவில் சமூகத்தை உசார்படுத்தக்கூடிய இஸ்லாமிய பண்பாட்டு அம்சங்களைக்கூட அகவயப்பட்ட ஒன்றாகத்தான் மாற்றியமைத்தார். உதாரணமாக நோன்புபிடிக்கச் சொன்னார். இதை வீட்டுக்குள் நோம்பு பிடித்துக் கொண்டிருக்கின்ற உன்னாவிரதத்திற்கு சமமான அம்சமாகத்தான் குறுக்கிப் பார்த்தார். இவற்றை வெகுஜனப் போராட்டமாக கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை எங்களுடைய பண்பாட்டிலிருந்தே நாங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். சிவில் சமூகத்தை உசார் படுத்தலாம். நாடலாவிய ரீதியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஒரு கட்டளை போட்டால் குத்பாவுக்குப் பிறகு ஒரு ஊர்வலத்தை ஒழுங்குபடுத்திச் செய்யலாம். ஆனால் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை ஓட்டுக்காக எங்கள் பிராந்தியங்களுக்கு வந்துபோகின்ற நிலை இருக்கிறதே தவிர ஒரு கொள்கைவாத அரசியலுக்கான உழைப்பு எந்த மட்டத்திலும் இல்லாத நிலைதான் இருக்கிறது.

இதனால்தான் சுனாமிக்குப்பிறகும் தென்கிழக்கு பல்கலைக்கழக எழுச்சிக்குப் பிறகும் முஸ்லிம் அரசியல் வாதிகள் புஸ்வானமாகப் போய்விட்டதாகத்தான் நான் கருதுகிறேன். முந்தி கருணாவுக்கு கப்பம் வாங்கிக் கொடுத்த இடையீட்டாளர்கள் மாதிரி அவர்கள் இப்போது ஏஜென்டு வேலை செய்கிறார்கள். இதற்காக அவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ற சொல்லை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

idrees.lk

Read Full Post »

கீழுள்ள இணைப்பை பயன்படுத்துவதன் மூலமாக இலங்கையின் 07வது நாடாளுமன்றத் தேர்தல்
தொடர்பான முழுமையான விபரங்களை எமது இணைய அன்பர்கள் அறிந்து கொள்ள முடியும்.

http://blog.dzoneonline.com/

Read Full Post »

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 196 பேரை வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்வதற்கென மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் முதற் தடவையாக 22 மாவட்டங்களிலும் நேற்று சுமுகமான வாக்களிப்பு இடம் பெற்றது.

50ற்கும் 55 வீதத்திற்குமிடையில் வாக்களிப்பு இடம் பெற்றது.

அனுராதபுரம் மாவட்டத்தில் 45 வீத வாக்களிப்பும்,
வன்னி மாவட்டத்தில் 33 வீத வாக்களிப்பும்,
யாழ். மாவட்டத்தில் 19 வீத வாக்களிப்பும்
புத்தளம் மாவட்டத்தில் 55 வீதமும்,
நுவரெலியா மாவட்டத்தில் 45 வீதமும்,
மன்னார் மாவட்டத்தில் 55 வீதமும்
பதுளை மாவட்டத்தில் 50 வீதமும்
திருகோணமலை மாவட்டத்தில் 50 வீதமும் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்முறை தேர்தலில்

36 அரசியல் கட்சிகளும்
301 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டதுடன்
இவற்றின் சார்பில் 7620 வேட்பாளர்கள் களத்தில் குதித்திருந்தனர்.
ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் 11,875 வாக்களிப்பு நிலையங்கள்.

thinakaran

Read Full Post »

சேர்ர அரசியல்,
கட்சி அரசியல்,
நமது அரசியல்

அரசியல் பற்றிய அறிவு எந்தளவுக்குத் தான் பொது மக்கள் பரப்பிக்குள் ஊடுருவிப் போயிருக்கிறது. கட்சி அரசியல் இஸ்லாமிய அரசியல் கிடையாது என்பதை எப்படித் தெளிவாக சொல்ல வேண்டும் ? என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு வழி இருக்கிறது. ஆனால் அதைக் கைக் கொள்வதில் எமது மெளலவிமார்களுக்கும் தயக்கம், அரசியல்வாதியும் தன் அதிகாரத்தினால் அதைத் தடுத்து நிறுத்தவும் முயல்கிறான்.
அண்மையில் நூறானியாப் பள்ளிவாயலில் பிர்தெளஸ் நளீமி நிகழ்த்திய குத்பா பிரசங்கத்திற்கு எதிராக சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அனுப்பிய கடிதம்.
குறைந்த பட்சம் நாம் அதனை எப்படிப் பார்க்கிறோம் என்றால் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் மொக்கையாக அனுப்பப்பட்டிருந்தமை. சகோதரர் ஹிஸ்புல்லாஹ் தமது அரசியல் பிரச்சாரங்களில் பொய் சொல்கிறார் என்று நாம் சம்மேளனத்திற்கு கடிதம் அனுப்பினால் அது தொடர்பில் எப்படியான நிலைப்பாடுகள் எடுக்கப்பட வேண்டும் ?
குற்றம் சுமத்தும் போது அவற்றிற்கான ஆதாரங்களைத் தான் முதலில் குற்றம் சுமத்தும் தரப்பில் இருந்து கேட்க வேண்டும். இஸ்லாமிய சட்ட மரபும் அதுவாகத் தான் இருக்கிறது.
இஸ்லாமிய சட்டவியல் ஒழுங்கில் உள்ள முக்கியமான ஒரு விதி ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் சுத்தவாளி என்பதாகும்.
நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. முடிந்து போன ஒரு விடயம் குறித்து இனிப் பேசுவதன் பயன் என்ன ?
இலங்கைக்குள் ஒரு முஸ்லிம்கெளுக்கென கொள்கை அரசியலை முன்னெடுக்க எமது ஊரில் மரம் வைத்தவர்கள் நாம். துரதிஷ்டமாக இன்று இலங்கைக்குள் மிக மோசமான இஸ்லாமிய அரசியலை முன்னெடுக்கும் சமூகமாக நாம் இருக்கின்றோம்.

சேர்ர அரசியல்

என்ன தான் சொன்னாலும் ஊருக்கு சேர் இல்லாட்டி எதுவும் நடக்காது என்பது எமது மக்களின் ஐதீகமாக இருக்கிறது. மரபான ஐதீகங்களின் மீதான கேள்வியும் அவற்றை உடைத்து மாற்றங்களின் மீது மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதும் மிகக் கடினமானதாகும்.
சேர் இன்றளவில் செல்வாக்குடன் ஊருக்குள் இருப்பதற்கு துணை செய்கின்ற விடயங்கள் நிறைய இருக்கின்றன.
– தொழில் எடுத்துக் கொடுத்தமை
– ஆதரவாளர்களின் தரத்திற்கு ஏற்ப கொன்றக்ட் கொடுத்தமை
இந்த இரண்டு விடயங்களையும் நாம் மிக முக்கியமாக நாம் பார்க்கிறோம்.
சேருக்கான ஆதரவைத் திரட்டுவதில் இவர்களின் பங்களிப்புக்குக்கள் மிகக் காத்திரமானதாக இருக்கிறது.
இதில் மிகத் தெளிவாகவே தெரிகின்ற விடயம். அவரவர் சுயம் சார்ந்து தமது விருப்புக்கு ஏற்ற ஒரு விடயத்திற்காக அதனைப் பொதுப்படுத்த முனைகிறார்கள்.
தமக்கு கொடுக்கப்பட்ட சலுகைக்கு விசுவாசத்தைக் காட்ட முழு ஊரையும் ஒரு அணியில் திரட்ட முயல்கிறார்கள் என்பது தான் இவர்கள் செய்யும் மடமை.

இதுவரை காலமும் இவ்வழி முறை கைகொடுத்தது. ஆனால் இனி வரும் காலங்களில் அவை எந்தளவு தூரம் நிலைக்கும் உதவும் என்பது கேள்விக் குறி தான்.

கட்சி அரசியல்

இது முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் தோற்றத்தோடு மாத்திரம் நாம் சுருக்கவில்லை, அதனோடு மாத்திரம் சுருக்கிப் பார்ப்பதும் தவறான விடயமுமாகும்.

காலங்காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளராக ஒருவர் இருப்பார்; வெளித் தெரியும் காரணமாக நாம் இப்படி வேணுமானால் சொல்லலாம் – வியாபாரிகளுக்கு சாதமாக இருப்பது.
இது போன்று வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம் அது காலம் காலமாக அந்தக் குடும்பத்தை தொடர்ந்தும் கட்சி அரசியலில் நிலைப்படுத்தியிருக்கும். இவர்களது ஆதரவு வெளிப்படையானதாகவும் இருக்கும் ஊரளவில் தெரிந்ததாகவும் இருக்கும்.
இதில் மிகவும் வலுவானதாக நாம் சொல்வது தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசியல்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்குப் பின் காங்கிரஸின் தலைவராக யார் வந்திருந்தாலும் என்ன தான் முடிவுகளை எடுத்தாலும் தொடர்ந்தும் தாமாகவே சில நியாயங்களைக் கற்பித்துக் கொள்வார்கள்.

இதில் சிந்தனை என்பதற்கே எந்த இடமும் கிடையாது. தமக்கு சிந்திக்கும் திறன் இருக்கின்றது என்பதனை இவர்கள் உண்மையில் மறந்தே போய் இருப்பார்கள்.
இவர்களுக்கு நாம் தான் சொல்ல வேண்டும் ; உங்களுக்கும் மூளை இருக்கிறது நீங்களும் சுயமாக சிந்திக்கலாம் ; முடிவு எடுக்கலாம்.

கொள்கைவாத அரசியல்

இலங்கைக்குள் இது எந்தளவு தூரம் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பது பெரும் கேள்வி. நாம் இதனுடாக எதனைச் சொல்கிறோம் என்பதற்கு நபி ஸல் அவர்களின் ஒரு ஹதீஸை முன்வைக்கின்றோம். ரஸூலுல்லாஹ் ஸல் அவர்கள் சொன்னார்கள் : உங்களில் மூன்று பேர் இருந்தால் அதில் ஒருவரைத் தலைவராக்கிக் கொள்ளுங்கள்.
நாம் உலகளாவிய முஸ்லிம் சமூகம் (உம்மத் ).
இவ்வுலகில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார். உலகில் 150 மில்லியன் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இலங்கையில் 02 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறோம். எங்களுக்கெல்லாம் யார் தலைவர் ?.
மிக வினயமாக நாம் சிந்திக்க வேண்டிய கால கட்டம். தியாகங்கள் இன்றி எமது வரலாறு வெற்றியானதாக அமைய மாட்டாது. நான், எனது மனைவி, எனது குழந்தைகள் என்ற சிந்தனைக்கு அப்பால் நாம் , எனது சமூகம், எனது ஊர், நான் சர்வதேசிய உம்மத் என்ற சிந்தனையில் வளர வேண்டும். அவற்றை வளர்க்க வேண்டும்.
இந்த இடத்தில் நபி ஸல் அவர்களின் எச்சரிக்கையை நாம் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

‘நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
– பாகம் 1, அத்தியாயம் 3, எண் 100 -.

Read Full Post »

கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக பேராசியர் அ.மார்க்ஸ் எழுத் தாளர், ஆய்வாளர், முன்னாள் பௌதீகவியல் பேராசிரியர் -சென்னை மாநிலக் கல்லூரி. மாநில அமைப்பாளர் – மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், தமிழ்நாடு.இலங்கையில் இன்றைய சூழலில் நபிகளை
இலங்கை முஸ்லிம்களுக்கும் மாற்றுமத சகோதரர்களுக்கும் அறிமுகமும் புரிந்துணர்வு கொள்ளவும் செய்கின்றன மிகப் பெரும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள் . நேற்றைக்கு முந்திய தினம் காத்தான்குடியில் கலந்துரையாடலில் ஈடுபட்ட பேராசிரியர் நேற்று அட்டாளைச்சேனையில் அதே போன்ற ஒரு நிகழ்விலும் பங்கு கொள்டார்ரகள் .
தமிழ் எழுத்துலக சூழலில் நபியவர்கள் பற்றி பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் அளவுக்கு யாரும் மிக நவீனமாக நபியை முன் நிறுத்தவில்லை .
நபியை நேசிக்க வேண்டும் அவர்கள் மீது ஆயிரமாயிரம் ஸலவாத் சொல்லியும் அல்லது கந்தூரி கொடுத்தாயினும் என்று சொல்கின்ற அலவி மெளலானாக்களோ அல்ல .
நபியை இன்னும் திக்ர் மஜ்லிஸ்களுக்குள்ளும் கந்தூரி நார்சாவாகவும் சுருட்டி வைத்திருப்பவர்கள் இவர்கள் தான் .

நேத்ரா டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நபியவர்களின் ஸீரா நிகழ்ச்சி அலவி மெளலானாவின் தொலை பேசி அழைப்பின் காரணமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டது .
இந்த நிகழ்வானது நபியின் சீராவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிகப் பெரும் அநீதியாகக் கருத வேண்டியது . இந்நிகழ்வில் பங்கு கொண்டவர்களில் நளீமியாவின் சிரேஷ்ட விரிவுரையாளரான ஏபிஎம். இத்ரீஸ் மாத்திரமே முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நவீன உலகின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் சக்தி சீராவுக்கு மாத்திரமே இருக்கிறது .அதன் மீது நிகழ்த்தப்படுகின்ற மறுவாசிப்பானது அனைத்துக்குமான் தீர்வாக அமைய முடியும் என்பது தான் மாற்றுமத சிந்தனையாளர்கள் இன்று வந்தடைந்திருக்குன்ற நிலையாகும். மிகக் கவலையானது சாணக்கியம் மிக்க அரசியல் தலைவர் எமது நபிகளார் என்று சொல்லிக் கொள்ளும் நம் சமூகம் அவர் மீதான மறுவாசிப்பை ஏன் தடுத்து நிறுத்துகிறது என்பது தான் புரியவில்லை .

நபியை நேசித்தல் என்பதன் அர்த்தம் அவர்கள் மீது ஸலவாத் சொல்வதனோடு சுருங்கிய ஒரு விசயமல்ல என்பதை அலவி மெளலானா போன்ற அரசியல் அபூ நவாஸ்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள் .
இலங்கையின் ஸாஹிராக் கல்லூரியில் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆற்றிய உரையின் தலைப்பு –
நபிகள்: சமூக அரசியல் ஆளுமை என்பதாகும் .இஸ்லாத்தை ஏற்றிராத மாற்றுமத அறிஞர் ஒருவர் இன்றைய சூழலில் நபிகள் எப்படி பார்க்கப்பட வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கும் மனநிலை, கண்ணோட்டப் புள்ளியை அலவி மெளலானா போன்றவர்கள் எப்போது வந்தடையப் போகிறார்கள்.
இஸ்லாம் கூறும் சமூக மாற்றம் எப்போது தான் வரும் …? இத்தகைய தலைவலிகள் நிறைந்த தலைமைகள் ஆக்கிரமித்திருக்கும் நிலமையில் …?.
நபியை நேசித்தல் என்பதன் அர்த்தம் விசாலித்தது . அல்குர்ஆனை தனது பண்பாடுகளாகக் கொண்டிருந்த நபியவர்களை இன்னும் நாம் மிகச் சரியாக எமது அரசியல் , சமூகத் தளங்களில் பயன்படுத்தத் தொடங்கவில்லை .
இந்தப் பின் போக்குத்தனம் மாறவேண்டும் . பதின் நான்கு நூற்றாண்டுகளாக வாழும் கொள்கைக்கு நடைமுறை பாவனைத் தன்மையைக் கொடுத்தவர்கள் எமது நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் .
என்றோ அழிந்து போன கொள்கைக்காக இன்னும் கார்ல் மார்க்ஸும் லெனினும் கொண்டாடப்படுகிறார்கள்.
உயிர் வாழும் கொள்கையைத் தந்து விட்டுப் போன நபி பற்றி நாம் வெறும் வார்த்தைப் புகழ்கள் மட்டும் துதி பாடிப் பாடி இருப்பதன் அர்த்தமென்ன …?
அல்குர்ஆனையை இன்னும் எமது சூழலுக்கு மிகச் சரியாக வாசிப்புச் செய்யவில்லை , இதில் சீராவை மறுவாசிப்புச் செய்வதற்கு மிக நீண்ட அனுபவமும் பக்குவமும் அதை விட மிக முக்கியம் தன் சுயநலம் தாண்டிய சமூகம் சார்ந்த உணர்வும் தேவைப்படுகின்றது.

Read Full Post »

மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கள்ளியங்காடு எனப்படும் முஸ்லிம் கொலனியில் தமிழ் மக்கள் அத்துமீறிக் குடியேற்றப்பட்டுள்ளதையும், அங்கு அமைந்திருந்த மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பள்ளிவாசலைப் புனரமைப்புச் செய்ய முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதையும் அப்பள்ளிவாசலின் முன்னாள் தலைவரான ஜனாப் துவான் ஆரிப் சராவுதீன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட காணி ஆணையாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

மேற்படி பள்ளிவாசல் எல்லைக்குள் அத்துமீறிக் குடியிருப்பவர்களையும், அங்கு கட்டிடங்கள் அமைக்கப்படுவதையும் உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறும், அதற்கான தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறும் அவர் மாவட்ட அரசாங்க அதிபரையும், காணி ஆணையாளரையும் கோரியுள்ளார்.

தொடர்ந்து படிக்க …
vaarauraikal

Read Full Post »

இந்தச் சின்ன வயதிலேயே ஹிஸ்புல்லாஹ்வுக்கு அல்லாஹ் இப்படியான பதவிகளை அவனுடைய அருளால் வழங்கி உதவியும் செய்து வருகிறான் . பட்டம் , பதவி , பொருளாதாரம் , கல்வி இப்படி எத்தனையோ அந்தஸ்துகளை அல்லாஹ் அவன் நாடியவர்களுக்குத் தான் கொடுப்பான் என்பது தானே நமது அடிப்படை நம்பிக்கை . ஒருவனுக்கு கிடைத்த நிஹ்மத்தை அவன் பெற்றுக் கொண்டு அதைத் துஸ்பிரயோகம் செய்து அல்லது அவனுக்குக் கிடைத்த பட்டம் பதவிகளை வைத்துக் கொண்டு சமூகத்திற்கு பயன் பெறச் செய்யாமல் தனது சுயநலத்திற்குப் பயன்படுத்தினால்தான் நாம் அவன் மீது கோபப்பட முடியும் , ஆத்திரப்பட முடியும் . மாறாத கிடைத்த பட்டம் , பதவிகள் , அதிகாரம் , அந்தஸ்த்துகளையும் தனது மக்களுக்காகவும் மண்ணிற்காகவும் முழுமையாக பயன்பெறச் செய்யும் போது அப்படியான ஒருவரை முடிந்தளவு தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டுமே தவிர மட்டந்தட்டி , மழுங்கடித்து வேடிக்கை பார்ப்பது எவ்வளவு கேவலமான செயல் .

சகோதரர் ஹிஸ்புல்லாஹ் இளம் வயதிலேயே தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து இந்த
சமூகத்திற்காக பணியாற்றத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை இந்த நிமிடம் வரை அவருக்கெதிராக நீங்களும் உங்கள் நண்பர்களும் செயற்பட்டு வருகின்றீர்கள் . அதற்கு என்ன காரணம் என இன்று வரை எங்களால் அறிய முடியவில்லை . ஆரம்ப காலத்தில் உங்கள் தலைமையில் இயங்கிய ISA என்ற அமைப்பின் மூலம் வாரத்திற்கொரு பிரசுரம் வெளியிடுவீர்கள் . அந்தப் பிரசுங்கள் பிரசுரம் சிந்தனை 01 , சிந்தனை 02 , சிந்தனை 03 என தொடராக ஒவ்வொரு ஜும்ஆ தினத்தனற்றும் வெளிவந்து கொண்டிருந்தது . அதை ஜும்ஆ பள்ளிகளின் வாயில்கலே நீங்களும் உங்கள் சகாக்களும் நின்று கொண்டு விநியோகித்தீர்கள் . ஒவ்வொரு பிரசுரமும் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வை வசை பாடும் பிரசுரமாகவேயிருந்தது . அதை பார்த்துப் பார்த்து , படித்துப் படித்து , மக்களுக்கும் புளிப்புத் தட்டி மரத்துப் போய் விட்டது . ஆனால் ஹிஸ்புல்லாஹ்வின் செல்வாக்கையோ மக்களின் ஆதரவையோ ஒரு துளி கூட மாற்ற முடியாமல் போய்விட்டது .

அதன்பின் உங்கள் பிரசுரம் பரிணாம வளர்ச்சி கண்டு புதிய நாளை என்று ஒரு பத்திரிகையை வெளியிடத் தொடங்கினீர்கள் .

சரி , உங்களது அரசியல் நடவடிக்கைகளுக்கு வருவோம் . கடந்த நகர சபைத் தேர்தல் வரை நீங்களும் உங்கள் சகாக்களும் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கே உங்கள் வாக்குகளை அளித்து வந்தீர்கள் . குறிப்பாக சகோதர பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கே உங்கள் பொன்னான வாக்குகள் போய்ச் சேரும் . கடந்த நகர சபைத் தேர்தலில் தான் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான உங்களது பனிப் போர் பகிரங்கப் போராக மாறியது . உங்களது அரசியல் அமைப்பான PMGG மூலம் நகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெளியாகிய 09 உறுப்பினர்களிலே ஒரே ஒரு உறுப்பினரை மட்டும் பெற்றுக் கொண்டு இப்போது நாங்களும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு சரி நிகர் தான் என்ற பெருமிதத்தோடு அவரை மீண்டும் தொடராக வன்னையாக எதிர்க்கவும் விமர்சிக்கவும் தொடங்கினீர்கள் .

Read Full Post »

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஸ்தாபகராகிய அன்புக்குரிய அப்துர்ரஹ்மான் அவர்களே !
நமது காத்தான்குடியின் கடந்தகால , சமகால அரசியல் நிலவரங்களையும் அபிவிருத்திப் பணிகளையும் பற்றி ஒரு சில நிமிட நேரம் உங்களுடன் மனம் திறந்து பேசுகிறோம் .

கடந்தகால 1970 ஆண்டிற்குப் பிற்பட்ட காலத்திலிருந்து இதனை ஆராய்வோம் . 1970ம் ஆண்டு முதல் 1977 ஆண்டு வரையான ஏழு ஆண்டுகள் நமது காத்தான்குடி ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாமல் அரசியல் அனாதையாக இருந்த காலகட்டம் … அக்கால கட்டத்தில் மட்டக்களப்பு தொகுதியாக அதிலும் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்து வந்தது . வழமையாக ஒரு தமிழரும் ஒரு முஸ்லிமும் தெரிவு செய்யப்பட்டு வந்த காலம் . முஸ்லிம்களுக்குள் ஏற்பட்ட பலமான போட்டியின் காரணமாக வாக்குகள் பிரிக்கப்பட்டு சிதறுண்டு போனதால் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களும் ( 1970 முதல் 1977 வரையான காலத்தில் ) தமிழர்களின் கைக்குப் போய்விட்டது .ஒருவர் திரு . செ .இராசதுரை மற்றவர் திரு.ராஜன் செல்வ நாயகம். இருவரும் மட்டக்களப்புத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக அஷ்ஷஹீத் அஹமது லெப்பை ஹாஜியாரின் தலைமையில் இயங்கிய உள்ளூர் தலைவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து தங்களால் முடிந்தளவு இவ்வூரீன் நலங்களை கவனித்து வந்தார்கள் . அதன்பின் நடைபெற்ற 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் காத்தான்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹூம் டாக்டர் பரீட் மீரா லெப்பை அவர்கள் பிரதியமைச்சராகவும் இருந்து தங்களால் முடிந்த சேவைச் செய்து வந்தார்கள் . இக்காலகட்டங்கள் இந்த இலங்கை நாடும் இலங்கை நாட்டின் எல்லா மாகாணங்களும் மாவட்டங்களும் அமைதியாக நிம்மதியாக இருந்த காலகட்டம் .
அதன்பின் 1983 ஜூலை கலவரத்தின் பின்புதான் முழு இலங்கையிலும் குறிப்பாக வட , கிழக்கில் இனரீதியான போராட்டங்களும் வன்முறைகளும் கண்ணிவெடிகளும் குண்டு வெடிப்புகளும் துப்பாக்கிச் சத்தங்களும் தொடர்ந்த நிலையில் 1985 ஏப்ரலில் முஸ்லிம் தமிழ்க் கலவரமாக மாறி மட்டக்களப்பு மாவட்டம் பூராவும் பரவி அதிலும் காத்தான்குடி மண் தான் அதிகமான பேரிழப்பைச் சந்தித்தது . இலங்கையிலேயே மிகப்பெரிய வங்கிக் கொள்ளையும் இவ்வூரில் தான் பயங்கரவாதிகள் நடத்தினார்கள் .
கோடிக்கணக்கான ரூபா பெருமதியான நகைகளும் பணமும் கொள்ளையிடப்பட்டு பல வர்த்தக நிலையங்கள் உடைத்தெறித்தும் கொள்ளையிடப்பட்டும் தமிழ்ப் பிரதேசத்திலிருந்த நமது வர்த்தக நிலையங்களெல்லாம் கொள்ளையிடபட்டு இரவோடு இரவாக உடுத்த உடையுடன் உயிர் தப்பி ஓடிவந்த காட்சிகள் நமதூர் தனவந்தர்களின் கடைகளுக்கும் வீடுகளுக்கும் சொத்துகளுக்கும் கப்பம் கேட்ட கடிதங்கள் , அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் . இப்படி பயங்கர ஆயுதம் தரித்த ஆயுதபாணிகளான பல தமிழ் பயங்கரவாத இயக்கங்கள் இந்த ஊரைச் சூறையாடி துவம்சம் செய்து வந்தவேளையில் தான் 1989 ம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்தது இந்தத் தேர்தலிலே போட்டியிட்டு பாராளுமன்றம் செல்ல யாருமே முன்வரவில்லை . காரணம் விடுதலைப் புலிகளாலும் ஏனைய ஆயுதக்குழுக்களாலும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை .எச்சரிக்கை என்னவென்றால் யாராவது இலங்கையின் அரசின் தேர்தலிலே பங்கெடுத்தால் , வேட்பாளராகப் போட்டியிட்டால் ‘ மரண தண்டனை “ தேடிச் தேடிச் சுட்டுக்கொல்வோம் என்ற எச்சரிக்கைதான் .

அந்த நேரத்தில் தான் இந்த மண்ணில் பிறந்த ஒரு சிறுபிள்ளை யாருமே நினைத்துப் பார்க்க , வாய்திறந்து பேச நடு நடுங்கிய காலகட்டத்தில் வீறிட்டு எழுந்து வந்தான் … நமது மண்னை , நமது உரிமையை , நமது உடமையை , நமது தன்மானத்தை காக்க அல்லாஹ்வின் உதவியால் எதற்கும் அஞ்சாமல் நான் வருகிறேன் என அஞ்சாத சிங்கமாய் நெஞ்சை நிமிர்த்தி வெளிப்படுகிறான் “ ஹிஸ்புல்லாஹ் “ என்ற வீர இளைஞன் . இந்த ஊர்மக்களெல்லாம் ஒரு கணம் வியந்து பார்க்கிறார்கள் . மறுகணம் நோன்பு நோற்று , அல்லாஹ்விடம் துஆக் கேட்டு , ஆசீர்வதித்து தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்த அனுப்புகிறார்கள் . புலிகளின் மரண தண்டனை விதித்த மரண ஓலை ஒரு கையில் தேர்தலுக்கான வேட்மனு மறு கையில் , அல்லாஹ்வின் துணையோடு தேர்தலிலே போட்டியிட்டு இந்த ஊர் மக்களின் 100 % ஆதரவோடு ( சும்மா ஆதரவில்லை ) நோன்பிருந்து , துஆக் கேட்டு , நெஞ்சம் நிறைந்த பூரிப்போடும் , வாஞ்சையோடும் வாக்களித்து சிறு வயதிலே எந்த அச்சமில்லாத அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சியவனான ஒரு பாராளுமன்றப் பிரதி நிதியாகி இந்த மண்ணில் இருப்புக்கும் , இந்த மண்ணில் வாழும் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கும் தன்னாலான முழு சக்தியையும் பயன்படுத்தி சேவையாற்றி வரும் போதுதான் 1990களில் ஏற்பட்ட எமது மண்ணின் அதியுச்ச பயங்கரவாத ஆயுத வெறியர்களின் இன அழிப்புப் போராட்டமும் இந்த மண்ணை விட்டே நம்மைத் துரத்தும் பயங்கரமான நடவடிக்கையும் ஆரம்பமாகின .
அந்த வேளையிலும் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் நெஞ்சுறுதியோடும் , விவேகத்தோடும் , இந்த மண்ணையும் இந்த மண்ணைச் சுற்றிய அயல் முஸ்லிம் கிராமங்களின் இருப்பையும் , பாதுகாப்பையும் உறுதிப்படுத்திப் பாதுகாக்க அதிகாரத்தில் இருந்த அரசினதும் அமைச்சர்களினதும் பாதுகாப்புப் படைகளினதும் பாதுகாப்பையும் , சகல விதமான நிவாரணங்களையும் , உதவிகளையும் தனது பதவிகளையும் செல்வாக்கையும் பயன்படுத்திப் பெற்றுக் கொடுத்து , இம்மண்ணின் பாதுகாப்பையும் , இருப்பையும் உறுதிப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை இம்மண்ணில் பிறந்த அத்தனை மக்களும் மறந்துவிட மாட்டார்கள் .

தொடரும் …..

இத்துண்டுப் பிரசுரம் கடந்த வெள்ளிக் கிழமைக்கு முந்திய வெள்ளிக் கிழமை ( 12/02/2010 ) முதலாம் குறிச்சி ஜும்மாஆப் பள்ளிவாயலில் வைத்து விநியோகிக்கப்பட்டது .

Read Full Post »

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

bbc.co.uk

Read Full Post »

February 7, 2010 – 12:01 am
ஒருபோர் என்பது உண்மையில் நம்பிக்கைகளுக்கும் யதார்த்தத்துக்கும் நடுவே நடக்கும் மோதல்தான் என்று சிலசமயம் சொல்லத்தோன்றுகிறது. இந்த எண்ணம் எனக்கு 1962 ஆம் ஆண்டில் நடந்த சீன இந்தியப் போர் குறித்து பிரிகேடியர் ஜான் தல்வி [Brigadier John Dalvi] எழுதிய ‘ஹிமாலயன் பிளண்டர்’ [ Himalayan Blunder] என்ற நூலை இருபதுவருடங்கள் முன்பு விழிபிதுங்க வாசித்தபோது உருவாகியது.

jeyamohan.in

Read Full Post »

monday, February 8, 2010

தேர்தல் தெருக்கூத்துக்கள் யாவும் முடிந்துவிட்டது மீண்டும் அடுத்த தேர்தலுக்கான சமிஞ்சைகள் வெளிவரத்தொடங்கிவிட்டது தமிழ்கட்சிகளின் தலைவர்கள் தமது வெற்றிக்காக வியுகங்களை நெறிபடுத்த தொடங்கிவிட்டார்கள் யாரும் தமிழ்ர்களின் ஐக்கியத்தைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை கூட்டமைப்பும், ஈபிடிபியும் தனித்துபோட்டியிடப் போவதாக அறிவித்துள்ளர்கள் ஏனைய தமிழ்கட்சிகளின் நிலைப்பாடுகளை இன்னும் சில நாட்களில் எதிர்பார்க்கலாம்

Read Full Post »

30 ஆண்டுகால கோர யுத்தத்தின் பிடியிலிருந்து நாடு முழுமையாக மீட்கப்பட்டிருக்கும் இவ்வேளயில், மக்கள் வாக்குப் பலத்தைப் பிரயோகிக்கும் மற்றுமொரு சந்தர்ப்பம் தற்போது கிடைத்திருக்கிறது. பல ஜனாதிபதிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த போதிலும் அவர்களால் பயங்கரவாதத்திற்கெதிராக ஆக்கபூர்வமாக எதையும் செய்ய முடியாதிருந்தது. புலிகளுக்கெதிராக யுத்தம் செய்த போதிலும் சர்வதேச அழுத்தம் காரணமாக அவற்றை இடைநிறுத்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டன.
thenee

Read Full Post »

மகிந்த ராஜபக்ஷ (117 Votes)
சரத் பொன்சேகா (548 Votes)
கருத்து கூற முடியாது (48 Votes)

virakesari.lk

Read Full Post »

சரத் பொன்சேகாவின் ‘நம்பிக்கைக்குரிய மாற்றங்கள்’ என்ற கோட்பாட்டை பின்பற்றி னால் நம்பமுடியாத அளவுக்கு பாதகமான நிகழ்வுகள் பல இந்த நாட்டில் நிகழும் என்று சுற்றாடல், இயற்கை வள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.மக்கள் இவற்றை நம்பினால் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தான் நாட்டின் கடைசி ஜனநாயகத் தேர்தலாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஜாதிக ஹெல உறுமயவின் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பில் இடம்பெற்றது.

thinakaran.lk

Read Full Post »

Older Posts »