Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜனவரி, 2010

30 ஆண்டுகால கோர யுத்தத்தின் பிடியிலிருந்து நாடு முழுமையாக மீட்கப்பட்டிருக்கும் இவ்வேளயில், மக்கள் வாக்குப் பலத்தைப் பிரயோகிக்கும் மற்றுமொரு சந்தர்ப்பம் தற்போது கிடைத்திருக்கிறது. பல ஜனாதிபதிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த போதிலும் அவர்களால் பயங்கரவாதத்திற்கெதிராக ஆக்கபூர்வமாக எதையும் செய்ய முடியாதிருந்தது. புலிகளுக்கெதிராக யுத்தம் செய்த போதிலும் சர்வதேச அழுத்தம் காரணமாக அவற்றை இடைநிறுத்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டன.
thenee

Read Full Post »

மகிந்த ராஜபக்ஷ (117 Votes)
சரத் பொன்சேகா (548 Votes)
கருத்து கூற முடியாது (48 Votes)

virakesari.lk

Read Full Post »

சரத் பொன்சேகாவின் ‘நம்பிக்கைக்குரிய மாற்றங்கள்’ என்ற கோட்பாட்டை பின்பற்றி னால் நம்பமுடியாத அளவுக்கு பாதகமான நிகழ்வுகள் பல இந்த நாட்டில் நிகழும் என்று சுற்றாடல், இயற்கை வள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.மக்கள் இவற்றை நம்பினால் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தான் நாட்டின் கடைசி ஜனநாயகத் தேர்தலாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஜாதிக ஹெல உறுமயவின் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பில் இடம்பெற்றது.

thinakaran.lk

Read Full Post »

வெறுமனே தேர்தல் பற்றிப் பேசிப் பேசியே இந்த நாட்கள் அர்த்தங்கள் ஏதுமின்றி கழிந்து கொண்டிருக்கின்றன. எம் காலத்தின் பெரும் நம்பிக்கையாக நாம் கொள்ளும் எமது குழந்தைகளேனும்
ஒழுங்காக வளர உதவுவோம்.
ஜெயமோகனின் இணையத்தில் இருந்து ஒரு பாசமுள்ள படித்த இளம் தந்தையின் கேள்வியும் அதற்காக ஜெ சொன்ன
பதிலையும் இங்கு பிரசுரிக்கிறோம். – எமது வார்த்தை –

அன்புள்ள ஜெ,

மிகப் பெரிய வாசிப்பு பின்புலம் சிந்தனைப் பரப்பும் உள்ள உங்களிடம் இளம் தகப்பனாகக் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்.
தங்கள் குழந்தைகளுக்கு அவையத்து முந்தியிருப்பச் செய்யும் நன்றியை நீங்களும் ஆற்றுகிறீர்களா ? எனில், அவர்கள் முந்தியிருக்க வேண்டும் என்று நீங்கள் நம்பும், விரும்பும் ’அவை’ எது ?
அவர்கள் வளர்ந்து தற்சார்புள்ள மனிதர்களான பின் அவர்களிடமிருந்து உங்கள் எதிர்பார்ப்பு என்ன ?
பல்லாயிரம் தந்தையர் மனதில் இக்கேள்விகள் இருக்கக்கூடும். தாங்கள் பதிலளிக்க இயலுமாயின் மிக மகிழ்வேன்.

நன்றி.
அன்புடன்,
மதி

அன்புள்ள மதி,

பொதுவாக இம்மாதிரி விஷயங்களில் இலட்சியவாதக் கருத்துக்களை விட நடைமுறைசார்ந்த கருத்துக்களையே நான் வைத்துக்கொள்ள விரும்புவேன். ஆனால் நடைமுறைவெறி இருக்காது. வேண்டுமென்றால் ‘நடைமுறைஇலட்சியவாதம்’ என்று சொல்லலாம்.

நான் புரிந்துகொண்ட சில விஷயங்கள் உண்டு. அதில்
முதலாவது குழந்தைகளை நாம் ‘வளர்க்க’ முடியாது. அவை வளர்கின்றன. அவற்றுக்கு சூழல் அளிக்கும் பலநூறு பாதிப்புகளில் ஒன்று மட்டுமே நாம். கொஞ்சம் பெரிய, கொஞ்சம் தீவிரமான பாதிப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். அந்தப்பாதிப்புகளை வாங்கி வளரும் அவன் ஆளுமையின் விதை அவனுக்குள் பிறவியிலேயே உள்ளது.

ஆகவே குழந்தைகளை நாம் நம் விருப்பப்படி வளர்க்க முடியும் என்பது பெரிய மடமை. அவர்கள் நன்றாக வந்தாலும் சரி, வரவில்லை என்றாலும் சரி அதில் நம் பங்களிப்பு ஒரு சிறு பகுதிதான். அதற்கான பொறுப்பையோ பாராட்டையோ நாம் ஏற்றுக்கொள்வது அபத்தமானது.

ஆக, நாம் அவர்களை எங்கும் ‘முந்தியிருக்க’ச் செய்ய முடியாது. அவர்கள் முந்துவது அவர்களிடம், அவர்களை உருவாக்கும் பலநூறு சக்திகளிடம், அவர்கள் எதிர்கொள்ளும் பலநூறு விசைகளிடம் உள்ளது.

நாம் செய்யக்கூடுவது நாம் அளிக்கும் சூழல் சிறப்பாக இருப்பதாகக் கவனித்துக்கொள்ளலாம் என்பது மட்டுமே. அந்தப்பொறுப்பு மட்டுமே நமக்கு உள்ளது. அதில் நான் செய்வதென்ன என்று கேட்டால் என்னால் சில சொல்ல முடியும்.

ஒன்று, நான் அறிவியக்கத்தை நம்பக்கூடியவன். ஆகவே என்னுடைய நம்பிக்கைகளை அவர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். என்னுடைய வாசிப்பையும் சிந்தனைகளையும் அவர்களுக்கு அளிக்கிறேன். அவர்களை ஒருவகையில் என் மாணவர்களாகவே நினைக்கிறேன்.

இரண்டு, சாத்தியமான உற்சாகமான சூழலை வீட்டில் அவர்களுக்கு அளிக்கிறேன். மகிழ்ச்சியான பெற்றோர் அளவுக்கு குழந்தை விரும்பும் பிறிதில்லை. ஆகவே குடும்பத்தில் மனக்கசப்போ பூசலோ நிலவ விடுவதே இல்லை.

மூன்று, ஒவ்வொருநாளும் அவர்களிடம் நேரம்செலவழிக்கிறேன். அப்போது வேடிக்கையும் சிரிப்பும் பேசும் பகிர்தலுமாகவே நேரம் செல்லவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன் [நான் ஒரு நல்ல மிமிக்ரி நடிகன் என்பது என் பிள்ளைகள் மட்டுமே அறிந்த ரகசியம்]

நான்கு, அவர்களிடம் எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறேன். அவர்களின் நினைப்பு, அவர்களின் தரப்பு என்று ஒன்றை கேட்க எப்போதும் உயன்றுகொண்டிருக்கிறேன். அவர்களிடம் தூரமோ விலக்கமோ நிகழக்கூடாது என எண்ணுகிறேன்.

அப்படியானால் அவையத்து முந்தியிருப்பச் செயல் என்று எதைச் சொன்னார் வள்ளுவர்? நான் விவேகம் சார்ந்து ஒரு தவறான விஷயம் குறளில் இருக்காது என நினைப்பவன். குறள் சொல்வது என்ன?

‘அவை’ என்று குறள் சொல்வது சமூக அரங்கை. ஒரு தந்தையின் கடமை ஏற்கனவே இருக்கும் ஒரு சமூக அரங்கில் தன் மகன் நிற்பதற்குத் தேவையான அனைத்தையும் அளிப்பது. கல்வி, சமூக அந்தஸ்து போன்றவை. நான் இன்றைய சமூக அமைப்பில், இன்றைய கல்வியமைப்பில் என் மகனுக்கு என்னால் சாத்தியமான சிறந்ததை அளிக்க வேண்டும். இதுவே நடைமுறை உண்மை. இதைத்தான் குறள் சொல்கிறது.

ஆனால் குழந்தைகளின் சவாலே வேறு. என் மகன் சம்பிரதாயமான கல்விக்குள் பொருந்த முடியாமல் மூச்சுத்திணறுகிறான். அதில் அவனால் முதலிடம் வர முடியாது. ஒரே பாடத்தை மீண்டும் மீண்டும் படித்து அபப்ழுக்கில்லாமல் பிரதி எடுப்பது அவனுக்குச் சலிப்பூட்டுகிறது. அவனுடைய வாசிப்பு பள்ளிப்பாடத்துக்கு வெளியே விரிகிறது. பள்ளிப்பாடத்தை மட்டுமே மீளமீளப் படிப்பவர்களுக்கானது இந்த அமைப்பு. இதில் அவனை ‘முந்தியிருக்க’ ச் செய்வதற்காக அவனிடம் நான் எதிர்பார்க்கக் கூடாது. அதற்காக அவன் மேல் நான் வன்முறையைச் செலுத்த முடியாது. அவனுடைய சவால்கள் அவனுக்கு மட்டுமே உரியவை, அதன் வெற்றி தோல்விகளும்.

குறளும் அதையே சொல்கிறது. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி அவர் எதிர்பார்த்ததைச் செய்வது என்றோ அவையில் முந்துவது என்றோ சொல்லவில்லை. அவன் தந்தைக்குப் பெருமை சேர்த்தல் என்றே சொல்கிறது. சேர்க்க முயல்தல் என்று கூடச் சொல்லலாம். என் அப்பாவை நான் மகிழ்வித்திருக்கவேண்டுமென்றால் நாகர்கோயிலில் ஒரு நல்ல ஆடிட்டராக ஆகியிருக்க வேண்டும். ஆனால் அபப்டி ஆகியிருந்தால் பாகுலேயன்பிள்ளை என்றபெயரை பல்லாயிரம் பேர் இன்று அறிந்திருக்கமாட்டார்கள்.

இந்தப் புரிதல் இல்லாமையாலேயே பலவகையான பதற்றங்கள் உருவாகின்றன. பொறியியலில் முதல்தர வெற்றியை அடைந்தபின் சினிமாவில் உதவி இயக்குநராக ஒரு பையன் வந்து வெயிலில் காய்ந்து அலைவதைக் கண்டு அந்த தந்தை என்ன பாடுபடுவார் என்று எனக்குப் புரிகிறது. அந்தப் பையனின் இடத்தில் கொஞ்சகாலம் முன்பு வரை இருந்தேன், இப்போது அந்த அப்பாவின் இடத்துக்கு மாறிவிட்டேன்.

ஆக, நமக்கு நம் சமூகம் அளித்திருக்கும் அவையில், கல்வியின் பொருளியலின் மேடையில், முந்தியிருக்கச் செய்வதும் முந்தவேண்டும் என்ற கட்டாயத்தை விதிக்காமலிருப்பதும்தான் நம் கடமைகள்.

ஜெ

Read Full Post »

கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கான மூன்றாவது தடவை அடிக்கல் நாட்டும் வைபவத்தைத் தொடர்ந்து காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டிருந்த அரசியல் பிரச்சார மேடையில் உரையாற்றிய கிழக்கு மாகாண அமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் புண்ணியமான கருமமொன்றைச் செய்ததன் பின்னர் பகிரங்கமாகப் பச்சைப் பொய்களையே பொதுமக்கள் மத்தியில் கூறியுள்ளார்.

read more on vaarauraikal

Read Full Post »

இன்று மாலை ( 10 ஜனவரி ) 5:30 மணியளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ காத்தான் குடிக்கு விஜயம் செய்தார்.இன்று புதுக் காத்தான் குடி மொஹிதீன் ஜும்மா பள்ளிக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.
புதுக் காத்தான் குடி மொஹிதீன் ஜும்மா பள்ளி வாயல் முழுமையாக உடைக்கப்பட்டு தற்போது அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் தொழுவிக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே.
பத்து நிமிடங்கள் மாத்திரமே இருந்த மகிந்த ராஜபக்‌ஷ மக்கள் முன்னிலையில் தமிழில் உரையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பலஸ்தீனில் அமைந்துள்ள பைத்துல் முகத்தஸை ஒத்த அமைப்பில் இந்தப் பள்ளி வாயல் கட்டிட அமைப்பு இருக்கும் என்ற செய்தியை ஏலவே பிரசுரித்திருந்தோம் என்பதனை நினைவூட்டுகின்றோம்.
இங்கு சுவாரஷ்யமான மக்கள் கருத்தொன்றினை உங்களோடு நாம் பகிர்ந்து கொள்கின்றோம்…
மகிந்த ராஜபக்‌ஷ காத்தான் குடிக்கு ஹெலிகொப்டர் மூலமாக வந்ததோ , தமிழில் பேசியதோ இங்கு மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஏற்படுத்தவில்லை . மாற்றமாக இவ்வளவு செலவு செய்து ஊரில் இருந்த இந்த மொஹிதீன் ஜும்மா பள்ளிவாயலை முழுமையாக இடித்துக் கட்டுகிறீர்களே சுபஹுத் தொழுகைக்கு எந்தப் பள்ளியிலும் இரண்டு ஸப்புகளைத் தாண்டியும் ஆட்கள் இல்லையே,
இதில் கீழ்த் தளத்தில் வாகனத் தரிப்பிடம் வைத்தால் என்ன ? மாடிகளாக உயர்த்தினால் என்ன..?.

கோடிகள் செலவு செய்து மாடிகளாகப் பள்ளிகள் கட்டி என்ன பயன் என்ற மர்ஹூம் தாஸீன் நத்வியின் கூற்றுத் தான் நினைவுக்கு வருகிறது.

Read Full Post »

அரசியல்வாதிகள் அப்படித்தான் தண்ணீர் இல்லாத இடத்தில் பாலம் கட்டுவதாகச் சொல்லுவார்கள் –
மாவோ சேதுங்.
நம் காலத்து அரசியல் நிலவரம் இன்று வரை இந்த யதார்த்தக் கூற்றினைப் பொய்ப்படுத்தாமலே இருந்து வருகிறது. நாமும் காலத்துக்குக் காலம் அரசியல் பற்றிய ஒரே கருத்தினையை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம்
அரசியல் ஒரு சாக்கடை.
தேர்தலுக்கும் அரசியலுக்கும் இடையிலான நுண்ணிய வேறுபாட்டினை அறிந்து கொள்வதில் நாம் விட்ட தவறே இன்று அரசியல் கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு நம்மைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றது.
இதனால் தான் அரசியலில் பங்கு கொள்கின்ற அனைத்துத் தரப்பினர் மீதும் ஒரே பார்வையை நாம் கொண்டுள்ளோம்.
இது முதல் நிலை.
இந்த நிலையின் மீது கட்டமைப்புச் செய்கின்ற அடுத்த நிலை தான் ஒரே வகையான கோணத்தில் அமைந்த விமர்சன நோக்கு.
எள்ளி நகையாடுகின்ற ,கேளிக்கையான ஒரு தன்மையைத் தான் கொண்டிருக்கின்றது.
எல்லாவற்றையும் ஒரே நிலையில் விமர்சிப்பது.
இன்னும் இருபது நாட்கள் மாத்திரமே ஜனாதிபதித் தேர்தலுக்கு மீதமுள்ளன.
ஒரே அணியில் நின்று போராடியவர்களே இன்று நேருக்கு நேர் மோதல்.
மிக இலகுவான முறையில் கணிப்பீடு செய்ய முடியுமான ஒரு விடயம்.
* சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் இருக்கின்ற இருந்து வருகின்ற மிகப் பிரதான இரு அரசியல் கட்சிகளில் ஒன்று தான் ஐக்கிய தேசியக் கட்சி.
அரை நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டிருக்கும் ஒரு கட்சியில் இருந்து எந்த அரசியல் தலைவனும் உருவாகவில்லையா…..?
ஐக்கிய தேசியக் கட்சியின் இலட்சியம் தான் என்ன…?
அரசியலை ஒரு ஜீவனோபாயத்திக்கான பொழப்பாகவா அது கொண்டிருக்கின்றது….?

* முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பதவியில் இருந்து விலகிய போது அந்த இடத்திற்கு எல்லோரும் கை காட்டும் ஒரே ஆளுமையாக இருந்தது மகிந்த தான்.
இது அரசியல் சாணக்கியம்.
மிகக் கவனமாக தனக்கான இடத்தை தானே உருவாக்குதலும் அதனை நிர்ப்பந்தமாக மாற்றி விடுதலும்.
* மிக அதிகமாக சொல்லப்படும் குற்றச் சாட்டு
மகிந்தவின் குடும்ப அரசியலும் பணப் புழக்கமும் தான்.
மிகக் கிட்டிய தகவலின் படி 250 ஆக இருந்த மகிந்தவின் குடும்ப் அங்கத்தவர்களின் எண்ணிக்கை தற்போது 391 ஆக அதிகரித்துள்ளது.

ஆனான போதும் நாம் மகிந்தவை ஆதரிப்பதற்கான நியாயம் அதனை விட வலுவானது என்றே நினைக்கின்றோம்.
உலக அரசியல் வரலாறு என்பது பிரபுத்துவ , மதவாதிக்க, சர்வதிகார , கம்யூனிஷ, இஸ்லாமிய, ஜனநாயக ஆட்சி என அனைத்தையும் கடந்தே வந்திருக்கின்றது.
உலகுக்கான பொது நியாயத் தன்னையை இழந்த போது எதுவுமே வரலாற்றில் நிலைத்ததில்லை
அது இஸ்லாமிய ஆட்சியாக இருந்தபோதும் சரியே..
அவற்றுக்கே உரிய நியாயத் தன்னையின் கூடுதல் அளவுக்கு ஏற்ப இன்றளவும் வரலாற்றில் அவை தொடர்ந்து பேசப்பட்டு மாத்திரம் வருகின்றது.
மனித மூளைகளால் ஒன்றிணைந்து தண்டிக்க முடியாததை வரலாறு நிச்சயம் கொடுக்கும்.
அது வரலாற்றுக்கே உரிய சிறப்பம்சம்.
இன்று நாம் தேடுவது சாணக்கியமிக்க அரசியல் தலைவனைத் தான்.
குறைந்த பட்ச அளவிலேனும் பொதுமக்கள் பரப்பிக்குள் இயங்காத ஒருவரை எப்படி மனம் தலைவனாகக் கொண்டாட முடியும்..?
பிரதேச சபையில் தொடங்கி பிரதமர் வரை போய்க் கொண்டிருக்கும் அரச தலைவர்களே தம் மக்களுக்காகச் செயற்படுவது என்பது மிக மிகச் சொற்பம்.
இந்த லட்சணத்தில் இராணுவத் தலைமைகள் தலைவலிகளாகத் தான் இருக்க முடியும்.
எல்லா அரசியல் கட்சிகளுக்கும் காலத்துக்கு காலம் வருகின்ற தேர்தல் மாத்திரமே கவனத்திற்குரிய விஷயமாகவும் வாழ்வாகவும் இருக்கின்றதே தவிர அவற்றிக்கு இடையிலான காலப்பகுதியில் இந்தக் கட்சிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற கவலை தான்.
இந்த இடத்தில் எழுகின்ற முக்கிய பிரச்சனை குழப்பத்தில் இருக்கின்ற மக்களை மீண்டும் தெளிவாகக் குழப்புவது போல் எழும் விமர்சனங்கள் தான்.
எல்லோருக்கும் எல்லாவற்றுக்கு விமர்சனம் உண்டு என்பதனை மறுப்பதற்கில்லை.
அதுவும் மாற்றீடுகளை விமர்சிக்கின்ற போது மிகக் கவனமாக நாம் விமர்சிக்க வேண்டி இருக்கின்றது.
எதை நோக்கி நாம் வேலை செய்கிறோமோ அதை நோக்கித் தான் அடுத்தவர்களை நாம் அழைக்க வேண்டியிருக்கிறது.
அப்படி சமூகத் தளத்தில் வேலை செய்யாதவர்கள் விமர்சங்களை மாத்திரம் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பது என்பது பெருந்தவறாகும்.
PMGG மீதான அரசியல் விமர்சனங்களும் இப்படித் தான் வலுவிழந்து போகின்றது.

Read Full Post »

கருத்து வேறுபாடுகளைப் படித்தல்

அதாவது அறிஞர்களின் கருத்துவேறுபாடுகளை ஒவ்வொரு இஸ்லாமிய வாதியும் படிக்க வேண்டும். அப்போது அவர்களின் சிந்தனைப் பிரிவுகளையும் அவர்களது அறிவுத்தரங்களையும் இஸ்லாமிய சட்டப் பாரம்பரியத்தையும் சரிவர உணர முடியும். இதனால்தானோ என்னவோ இஸ்லாமிய அறிஞர்கள் சிலர் யார் புகஹாக்களின் கருத்துவேறுபாட்டை அறியவில்லையோ அவன் பிக்ஹின் வாடையைக் கூட நுகரமாட்டான்’ என்றார்கள்.

இத்ரீஸ்.lk இணையத்தில் முழுமையாக வாசிக்க முடியும். மிக அருமையான ஒரு கட்டுரை .
சமுகத்தில் இயங்குகின்ற இயங்க நினைக்கின்ற அனைத்து தஃவா இயக்க அங்கவத்தவர்களும் வாசிக்க வேண்டியது.

Read Full Post »

– யஸியா வாஸித்

கிட்டத்தட்ட 65 வீதமான மக்கள் மிக மிக தெளிவாகவே இருக்கின்றார்கள். கொழும்பில் இருந்து ஓடர் போடப்பட்டதால்தான், முள்ளி வாய்க்காலில், அது கெரியவுட் பண்ணப்பட்டது. ஓடர் போடப்படவில்லையானால், அது அங்கு கெரியவுட் பண்ணப்பட்டிருக்காது. எனவே ஓடர் போட்டவர்தான் பெஸ்ட், அதை கெரியவுட் பண்ணியவர் ஒரு வேஸ்ட் என அளகாகவே விளக்கம் சொல்கின்றார்கள்.

தேனீ

Read Full Post »

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் வரும் 8ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் விநியோகிக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

by வீரகேசரி இணையம்

Read Full Post »

டெங்கு நோயால் கடந்த 2009 ஆம் ஆண்டு 32713 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
இவர்களில் 295 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2009 ஆம் ஆண்டில் பெருமளவானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றங்களும் இதற்குப் பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

வீரகேசரி

Read Full Post »

புகழ்பெற்ற பிரான்ஸிய தத்துவ ஞானியும் எழுத்தாளருமாகிய வோல்டர் நேரத்தைப்பற்றி பின்வருமாறு கூறுகின்றார்.

“நேரத்தை விட மிகவும் நீளமானது எதுவும் கிடையாது. ஏனெனில் அது நித்தியத்தின் ஓர் அளவுகோளாகும். அவ்வாறே நேரத்தை விட மிகவும் குறுகியது எதுவும் கிடையாது. ஏனெனில் அது முக்கியமான எல்லாப் பணிகளையும் சாதிப்பதற்கு போதாமல் இருக்கின்றது. நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி காரியங்களைச் சாதிப்பதற்கு நாம் வரும் போது அந்த நேரத்தை விட அதி விரைவாக நகரக்கூடியது எதுவும் கிடையாது. எதிர்பார்த்து காத்திருப்பதில் நாம் நேரத்தை கழிக்கும் போது அந்நேரத்தை விட மிக மெதுவாக நகரக்கூடியது எதுவும் கிடையாது. மனிதர்கள் எல்லோரும் நேரத்தின் அருமையை புரியவில்லை. அவர்கள் அனைவரும் நேரத்தை வீனாக கழித்த பிறகே அதற்காக வருந்துகிறார்கள். நேரமில்லமல் எந்தப் பணியையும் நிறைவேற்ற முடியாது.”

வோல்டர் சொல்வதும் நாம் சொல்வதும் இதுதான். பொருத்தமான ஒரு மனிதன் பொருத்தமான ஒரு இடத்தில் இருந்தால்தான் வெற்றிகரமான ஒரு திட்டம் பொருத்தமான நேரத்தில் உருவாகும். எனவே புதிதாக பிறந்திருக்கும் இந்த வருடத்தை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான திட்டத்தை நாம் வைத்திருக்கிறோமா? நாம் அறியாமலேயே நேரம் கழிந்துவிட்டது என்றால் நமது திட்டத்தில் எங்கோ கோளாறு இருக்கின்ற என்று அர்த்தம். நாம் எதிர்பார்த்து காத்திருக்கும் போது திட்டத்தில் ஒரு கட்டம் முடிந்து அடுத்த கட்ட வெற்றிக்காக காத்திருக்கிறோம் என்பது அர்த்தமாகும்.

இத்ரீஸ்.lk

Read Full Post »

Read Full Post »