Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சமூகவியல்’ Category

கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கான மூன்றாவது தடவை அடிக்கல் நாட்டும் வைபவத்தைத் தொடர்ந்து காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைக்கப்பட்டிருந்த அரசியல் பிரச்சார மேடையில் உரையாற்றிய கிழக்கு மாகாண அமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் புண்ணியமான கருமமொன்றைச் செய்ததன் பின்னர் பகிரங்கமாகப் பச்சைப் பொய்களையே பொதுமக்கள் மத்தியில் கூறியுள்ளார்.

read more on vaarauraikal

Read Full Post »

wfdk_jpg
உலகம் முழுவதும் சுமர் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது.

வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும், இதற்காகப் பள்ளிக்கு அனுப்புதல், உடைகள் வாங்குதல், அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாகவும் ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில்,

“உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இதில் 20 நாடுகள் ஆபிரிக்காவைச் சேர்ந்தவை.

உலக அளவில் 2015ஆம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும், இந்த எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

somaia200
தற்போது பட்டினியால் தவிக்கும் 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும்.

உணவு கிடைக்காமலும், போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது.

உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.

சோமாலியாவில், வன்முறையும், உள்நாட்டுப் போரும் அந்நாட்டை உருக்குலைத்து விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, மோதலில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்நாட்டில், ஒரு குடும்பம், தனக்குத் தேவையான உணவு, குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலராக இருந்தது. அது செப்டம்பர் மாதம் 171 டொலராக உள்ளது.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும், உடைகள் வாங்குவதையும் சோமாலியா மக்கள் கைவிட்டு நெடுநாட்களாகி விட்டன. பலர் கிடைக்கின்ற உணவைச் சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்நாட்டில், சத்தான உணவு கிடைக்காததால், ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.

ஆபிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆபிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது.

கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர்.

உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது.

விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழந்து போய் விட்டது.

1980ஆம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006இல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால்அது போதுமானதாக இல்லை.

உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதுமே பட்டினிச் சாவுக்குள்ளாகி விடும். இதை எவராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.

உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆபிரிக்க கண்டமாகும்” என்றார்.
– வீரகேசரி இணையம் 10/16/2009 –

Read Full Post »

அரேபியா சுற்றுப் பயணம்

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரக கவுன்சிலின் ஏற்பாட்டில் இலங்கையிலிருந்து 25 மாணவர்கள் 10 தினங்களுக்கு சவூதிக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
http://www.thinakaran.lk

Read Full Post »

கிழக்கு மாகாணத்தில், மட்டக்கிளப்பு, தாளங்குடாவில் கல்விக்கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இது தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசம். இதில் முஸ்லிம் மாணவர்களும் உள்ளனர். அண்மையில் இங்கே பகிடிவதை (றாக்கிங்) என்ற பெயரில் கல்லூரிக்கு புதிதாக வந்த முஸ்லிம் மாணவிகளின் ஸ்காபை (முஸிலிம் பெண்கள் தலையில் அணியும் சீலை) கழற்றி பகிடி பண்ணி உள்ளார்கள். (அது முஸ்லிம்களின் மானம்) இதனால் முஸ்லிம்இ தமிழ் மாணவர்களுக்கிடையில் சண்டை ஏற்பட்டு இறுதியில் மருதமுனைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவரொருவர் தமிழ் மாணவர்களால் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.muslim student

இது சம்மந்தமாகக் கலந்தாலோசித்து இப்பிரச்சினைக்கு ஒரு முடிவைக்காண மட்டக்கிளப்பு ‘அனைத்துப் பள்ளிவாசல்கள் சபை’ கல்லூரியின் அதிபர் பாக்கியராஜாவை சந்தித்துப் பேச விரும்பி இருந்தது. அவரின் பதில் ஆச்சரியமாக இருந்தது ‘அங்கே ஒன்றும் நடக்கவில்லை, என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைத்து உங்களை சந்திக்க எனக்கு நேரமில்லை என்று கூறி மறுத்து விட்டார். பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாத, தெரியாத, ஆளுமையற்ற இந்த அதிபர் வளமையாக இப்படித்தான் பேசி சமாளித்து வருகிறார் என்று அங்குள்ள மாணவர்கள் கூறுகின்றனர்.

இங்கே படிக்கும் முஸ்லிம் மாணவிகள்இ தங்களுக்கு ஸ்காப் அணிய அனுமதி வேண்டி கல்லூவியின் பி(ரி)ன்சிப்பல்லுக்கு எழுத்து மூலம் அனுமதி கோரி இருக்கின்றார்கள். இதில் இருபதுக்கும் மேற்பட்ட பிரதிகளை முஸ்லிம் அமைச்சர்களுக்கும், இஸ்லாமிய அமைப்புக்களுக்கும் அனுப்பியிருக்கின்றார்கள், அதில் அவர்கள் இந்த விடயம் எங்களின் அடிப்படை உரிமை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆனால் எந்த மேதைகளும், நிர்வாகத்தில் இருப்பவரும் இதைக் கவனத்தில் கொள்ள வில்லை. இம்மாணவிகள் நிலத்தையோ, வளத்தையோ, நாட்டையோ, தேசத்தையோ கேட்கவில்லை. பாவம் தனக்குச் சொந்தமான தலையில் ஒரு துண்டு துணியைத்தானே போடக் கேட்கிறார்கள்.

ஒரு நல்ல எழுத்தாளர், பொது நோக்கம் கொண்டவர், பிரச்சினையைத்தீர்க்க வேண்டும். இன முரண்பாட்டை முளையிலேயே கிள்ளி வீச வேண்டும் என்ற நல் நோக்குடனும் இது விடயமாக அமைச்சர் முரளிதரனின் பேச்சாளர் எம்.பி. ஜிவியன் அவர்களிடம் பேசிய போது அவர்: முஸ்லிம் மாணவிகள் ஸ்காப் அணிய அனுமதிக்கப்படமாட்டார்கள், அவர்கள், இக்கல்லூரி அவர்களுடையது என்று காட்டவே இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று சொன்னாராம். பாருங்கள் இவருடைய மன நிலையை.

அதே நேரம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசத்தில் அமைந்துள்ள கலாபீடங்களில் (கல்முனை ஸாக்ஹிறாக்கல்லூரி, தென் கிழக்குப் பல்கலைக்கழகம், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி, அட்டாளச்சேனை கல்விக்கல்லூரி) தமிழ் மாணவ மாணவிகள் அவர்களின் மத உரிமைகளோடு நடமாடுகிறார்கள் யாரும் தடுப்பதில்லை தடுக்கவும் அவ்வதிபர்கள் அனுமதிப்பதில்லை. அப்படி நடந்திருந்தால் அதற்கொரு உதாரணமேனும் கூற முடியுமா? ஒவ்வொருவரும் தங்களின் விருப்பு வெறுப்புக்களை மற்றவர்களுக்குள் திணிப்பதை விட்டு விட்டு மற்றவருடைய உரிமைகளை மதிக்கவும், சகிக்கவும் பழகிக் கொண்டால் நாம் சந்தோஷமாக வாழ முடியாதா?

கனடாவில், அமெரிக்காவில், கட்டாரில், சவூதியில், முஸ்லிமும், தமிழரும், சிங்களவரும், சீக்கியரும் ஒரே அறையில் அவர்களுக்கான சொந்த உரிமைகளோடு வாழலாமென்றால் ஏன் தாளங்குடா கல்விக்கல்லூரியில் இது முடியாது? கல்லூரி அதிபர்கள் திருந்துவார்களா?

 

Read Full Post »

இந்த மடலுடன் காத்தான்குடியிலுள்ள சீதனம்/கைக்கூலி தொடர்பாக நான் உங்களுக்கு வழங்கும் விளக்கங்களை முடித்துக்கொள்கிறேன்.
ஏன் காத்தான்குடிவாசிகள் அயல்கிராமங்களில் திருமணம் முடிக்கக் கூடாது என்ற உங்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருந்தீர்கள். திருமண விவகாரத்தில் பெரும்பாலான காத்தான்குடி மக்கள் தங்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைத்துணையை அந்த ஊருக்குள்ளேயே தேடிக்கொள்வதுதான் அங்கு காணப்படும் வழக்காறு. ஏன், இன்னும் சொல்லப்போனால் தங்களின் தெருவுக்குள்ளேயே அவர்களின்
தெரிவு கிடைக்குமானால் அதனை மேலாகக் கருதுபவர்களும் இருக்கின்றனர். இவற்றிற்கெல்லாம் காரணம் ஊர்ப்பற்றும் காத்தான்குடியில் காணப்படும் அடிப்படை வசதிகளுமாகும்.
வாழ்க்கைத்துணைத் தெரிவு அவரவர் சுயவிருப்பு வெறுப்புக்குட்பட்டது. அவரவர் விரும்பியதையே தெரிவுசெய்வார்கள். யாரும் யாரையும் அந்தவி;டயத்தில் வரையறுக்கவும் முடியாது, நிர்ப்பந்திக்கவும் முடியாது.

ஒருவிடயத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது மக்கள் எப்போதும் அபிவிருத்தியடைந்த அல்லது அடைந்து வருகின்ற பகுதியை நோக்கி தம்வாழ்விடத்தை அமைக்க முற்படுவது இயல்பானது. ஆனால் காத்தான்குடிக்கு அருகிலுள்ள அயல்கிராமங் களில் காத்தான்குடிவாசிகள் திருமணம் முடிக்காதது அந்த ஊர்களைப்புறக்கணிப்பதாக அமையாது. அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும்
காத்தான்குடியில் திருமணம் முடிக்கிறார்கள். அதுமட்டுமல்ல தங்கள் தொழில் மற்றும் குழந்தைகளின் கல்வியெதிர்காலம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு காத்தான்குடியில் குடியேறுபவர்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நிராகரிக்க முடியாது. மாறாக சிந்திக்கப்படவேண்டிய விடயம் என்னவெனில் அப்பிரதேசங்களை விட்டும் மக்கள் நீங்காமலிருக்க எத்தகை நடவடிக்கை களை
மேற்கொள்ளலாம் என்பதாகும். அப்போது அபிவிருத்தி என்ற அம்சம் முதலிடம் பெறுவதை யாரும் மறுக்கமுடியாது. எனவே அது சார்ந்த கவனமும் திட்டமிடலும் மேற்கொள்ளப்படவேண்டும்.

காத்தான்கடிக்கருகில் உள்ள முஸ்லிம் பிரதேசங்கள் காத்தான்குடியின் இருப்புடன் மாத்திரம் தொடர்புபட்ட விடயமன்று. மாறாக அது முழுக் கிழக்கு முஸ்லீம்களுடனும் தொடர்புற்ற பாரதூரமான ஒரு விடயம் என்பதை நாம் நன்கறி யவேண்டும்.
90களில் காத்தான்குடியை எழப்பிவிடுவதன் மூலம் முழு மாவட்டத்திலிருந்தும் முஸ்லீம்களை விரட்டிவிடுவதற்கான எத்தனங்கள் பயங்கரமான முறையில் மேற்கொள்ளப் பட்டும் அது சாத்தியமற்றுப்போனதை நாம் அறிவோம். அப்போது இவ்வயற்கிராமங்கள் அனைத்தும் இடம்பெயர்ந்து காத்தான்குடியில் இருந்தபோதும் அங்கு நிலவரம் சரிவந்ததன் பின்னர் மக்கள் வாழ்விடத்தை நோக்கி மீண்டும்
துணிவுடனும் பற்றுடனும் சென்றனர்.

ஆனால் அதற்கு முன்னர் ஏறாவூரை அண்டிய முஸ்லிம் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் இன்னமும் அங்கு குடியேறமுடியாத நிலையே காணப்படுகிறது.

இவற்றிற்கு சற்று வித்தியாசமாக கோறளைப்பற்று முஸ்லீம்கள் வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகியபிரதேசங்களை அண்டிய பகுதிகளில் நிலத்தொடர்போடு அமைந்ததாக புதிய கிhமங்களையும் குடியேற்ற வசதிகளையம் மேற்கொள்வதோடு நிர்வாக ரீதியாக புதிய புதிய பிரதேசங்களை உருவாக்குவதிலும் செயற்படுகிறார்கள். இவர்களின் நிலவிரிவாக்கம் என்ற திட்டமிட்டசெயற்பாடுகளுக்கு பல காரணிகள் சாதமாகக்
காணப்படுகின்றன.

– வாழ்விடத்திற்கான தேவைப்பாடுடைய மக்கள்,

– விசாலமான நிலத்தொடர்புற்றதும் தொழில்வாய்ப்பிற்கான வசதிகளும் (நெல், விவசாயம், மந்தைவளர்ப்பு) கொண்ட பரந்தநிலவசதி,

– நிலவிஸ்தரிப்பை இலக்காகக் கொண்டு செயற்படும் பிரதேச தலைமைத்துவமும் அரசியல் பிரதிநிதித்துவமும்,
என்று அக்காரணிகளை நான் இனங்காண்கிறேன்.

உண்மையில் நல்ல தொழில்வாய்ப்பு இருக்குமாக இருந்தால் அங்க குடியேறிவாழ்வதற்கு மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். காத்தான்குடியைப் பொறுத்தவரை ஏனைய இரு ஊர்களைவிடவும் விருத்தியடைந்ததும் வித்தியாசமான தொழில்வாய்ப்பைக் கொண்டதுமாகும். அயல் கிரமங்களில் கூட விவசாயம் மந்தைவளர்ப்பு போன்ற சுய உற்பத்தித் தொழில்துறையற்ற அல்லது குறைவாகவுள்ள பகுதிகளாகவே உள்ளன.

உதாரணமாக காத்தான்குடிக்கு தயிர் ஒன்றில் படுவாங்கரை போன்ற தமிழ்ப்பகுதிகளிலிருந்து வரவேண்டும். அல்லது ஏறாவூர், ஓட்டமாவடியிலிருந்து வரவேண்டும். காத்தான்குடிமக்களுக்கு குளிரூட்டப்படாத முற்றிலும் இயற்கையான பசும்பால் (Fresh Milk) அருந்தும் சந்தர்ப்பமே கிடையாது. அல்லது மிகவும் அரிதாகவே இருக்கிறது.. அவர்களுக்குக் கிடைப்பது செயற்கையாக பெட்டியில் அடைத்த
பால்மாதான். அவற்றின் தற்போதைய விலைப்பெறுமதியையும் நாம் நன்கறிவோம். ஏறாவூரின் சிலபகுதி பாடசாலைச் சிறார்கள் ‘நாங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் பசுப்பால் அருந்திவிட்டுத்தான் பாடசாலைக்கு வருகிறோம்’ என்று ஆனந்தமாகக் கூறுவார்கள். பொதவாக ஏறாவூர் வாழைச்சேனை, ஓட்டமாவடிப் பிரதேசங்களில் சாதாரணமாக ஹோட்டல்களில் இதனைப்பெற முடியும். இத்தனைக்கும் இந்தப்பால்
உற்பத்தி அவ்வப்பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அருகிலுள்ள கிராமங்களில்தான் அவை பெறப்படுகின்றன. காத்தான்குடியை அண்டிய கிராமங்களில் எத்தகைய தொழில்களில் மக்கள் ஈடுபடுகிறார்கள் என்பதையும் அதனால் எந்தளவிற்கு தன்னிறைவு அடைகிறார்கள் என்பதையும் அதேநேரத்தில் ஓட்டமாவடி, வாழைச்சேனையை அண்டிய கிராமங்களில் எத்தனை வகையான தொழில் வசதிகள் உள்ளன
என்பதையும் ஆரோக்கியமானதொரு பொழுதுபோக்கிற்காகவேனும் அப்பகுதிகளுக்குச் சென்று இத்தகவல்களை திரட்டிப்பார்த்தால் அதனை நன்கறிய முடியும். எனவே இவ்வாறு பல்வேறுபட்ட தொழிற்துறைக்கான வாய்ப்புவசதிகள் காத்தான்குடியை அண்டிய கிராமங்களுக்கும் இருக்குமாகவிருந்தால் அங்கு குடியேறவும் வாழவும் தயாரான மக்கள் இருக்கிறார்கள். எனவே இப்பிரதேசங்களின் இருப்பை
பாதுகாக்க இதுவசதியாகவிருக்கும். மாறாக அப்பிரதேச முஸ்லீம்களின் இருப்பை பாதுகாக்க எல்லோரும் அங்கு திருமணம் முடிக்கவேண்டும் என்று கூறுவது அதற்கான உணர்ச்சிபூர்வமான தீர்வுகளில் ஒன்று மட்டுமே. அறிவுபூர்வமான திட்டமிட்ட தீர்வுதான் முஸ்லீம் சமூகத் திற்கு நீடித்து நிலைக்கும் பயன்களை ஈட்டித்தரும்.

அபூ ஷாறத்

Read Full Post »

home1காத்தான்குடி முழு இலங்கை முஸ்லீம் பிரதேசங்களுக்கும் ஒரு முன்மாதிரியான ஊர் என்ற பெயரைப்பெறும்போதெல்லாம் நாம் அதன் முக்கியத்துவத்தை அறிந்து பெருமையடைகின்றோம். ஆனாலும் சீதனம்/கைக்கூலி விடயத்தில் அது இன்னமும் சீர்திருத்தக் காலகட்டத்திலேயே இருந்துகொண்டிருக்கிறது. மட்டுமல்ல, அதனை ஒழிப்பதற்கான செயற்திட்டங்களின் வேகமும் மந்தகதியிலேயே காணப்படுகின்றன என்பதுவே கவலைக்குரியவிடயமாகும்.
எந்தவொரு சமூகத்தீங்கையும் ஒழிப்பதற்கு படிமுறையைக் கையாழவேண்டும் என்பது அல்குர்ஆன் நமக்குக் கற்பிக்கும் பாடம்.
சீதனம்/கைக்கூலியை காத்தான்குடி உலமாக்கள் பிழையென்று கண்டறிந்ததும், பின்னர் அதற்காக தங்களது அறிவுத்தரம், சமூகத்தில் காணப்படும் அவர்களுக்கான மேலாதிக்க சக்தி என்பவற்றிற்கேற்ப அவர்கள் அவ்வப்போது முன்னெடுத்த தீர்மானங்கள், திட்டமில்கள். பிரச்சாரங்கள் என்பவற்றையும் அது கொண்டுவந்த சாதகமான விளைவுகளையும் நாம் மறந்துவிடமுடியாது. இவையெல்லாம் காத்தான்குடிக்கு இஸ்லாமிய இயக்கங்களும், பிரசார நிறுவனங்களும் உருவாவதற்கு முன்னர் ஏற்பட்டவை.
மாப்பிள்ளையின் பின்னால் அவரது உறவினர் ஒருவர் சொப்பிங் பை ஒன்றுடன் நின்றுகொண்டு மாப்பிள்ளைக்கு வழங்கப்படும் பணம் வைக்கப்பட்ட என்வலெப்களை வாங்கி அதனுள் இட்டு பின்னர் அவையனைத்தையும் வழங்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலுடன்; சபையில் வாசித்துக்காட்டி குறைந்த தொகை வழங்கியவர்களை கேவலப்படுத்தும் இந்த நடைமுறையிலிருந்து நமது மக்களை மீட்டு மானங்காத்தது காத்தான்குடி உலமாக்களையே சாரும்.
ஆனால் சக்திமிக்க ஆற்றல்கொண்ட இஸ்லாமிய தஃவா அமைப்புக்கள் காத்தான்குடியில் உருவானதன்பின்னர், அவர்கள் இந்தப்பிரச்சினைக்கு எந்தப்பெறுமானம் கொடுத்தார்கள் அல்லது கொடுக்கிறார்கள் என்பது இன்னமும் அவர்களால் விரிவாகவும் தெளிவாகவும் முழு ஊருக்கும் முன்வைக்கப்படவில்லை என்பதை நான் இங்கு தீர்க்கமாகவே சுட்டிக்காட்டுவேன். அவர்களால் சீதனம்/கைக்கூலிக்கெதரான பிரச்சார நடவடிக்கை திருப்திகரமானளவிற்கு மேற்கொள்ளப்படுகிறது என்பதும் அதனடியாக பாரிய பல மாற்றங்கள் சில தனிப்பட்ட சகோதரர்களின் தியாகங்களினால் ஏற்படுவதையும் காத்தான்குடியில் நிறையவே காணக்கூடியதாகவிருக்கிறது. ஆனால் அவ்வமைப்புக்களின் கட்டமைப்பில் கோட்பாட்டுரீதியாகவும் குறிப்பாக அங்கத்தவர்களை உள்ளீர்க்கும் சந்தர்ப்பங்களில் அவர்களை இஸ்லாமிய வாழ்வுநோக்கிய பயிற்றுவித்தலில் இதற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதும் இன்னமும் தெளிவற்ற ஒன்றாகவே இருக்கிறது. விதிவிலக்காக, இதனை கோட்பாட்டு ரீதியாகவும் தமது அங்கத்தவர்களுக்கு மத்தியில் சாத்தியமானவரையில் நடைமுறைப்படுத்த எத்தனிக்கும் விதத்திலும் ஒரு அமைப்பு இருந்தது என்பதையும் என்னால் தெளிவாக குறிப்பிடமுடியும்.
இவ்விடயத்தில் இஸ்லாமிய பிரச்சார அமைப்புக்கள் இத்தகைய நிலையைக் கொண்டிருப்பதற்கு பின்வரும் இருகாரணங்களை என்னால் பெறமுடிகிறது.
1. வாழ்வு தொடர்பான மக்கள் மனோ நிலை
2. அங்கத்தவர் எண்ணிக்கை தொடர்பான அமைப்புக்களின் சிந்தனை.
தனிப்பட்ட வாழ்வு, மார்க்க வாழ்வு என்று மக்கள் வாழ்வை இரு கூறாகப்பிரித்து தங்கள் மார்க்க வாழ்விற்கான வழிகாட்டல்களை இஸ்லாமிய அமைப்புக்களிடமும் தனிப்பட்ட வாழ்விற்கான வழிகாட்டல்களையும் தீர்மானங்களையும் தமது மனோ இச்சையிடமும் பெறும் மக்களின் போக்கினால் மக்களை தமது அமைப்பின் கட்டுப்பாட்டில் முழுமையாக வைத்திருப்பது இஸ்லாமிய அமைப்புக்களுக்கு கடினமானதொன்று.
இஸ்லாமிய அமைப்புக்கள் தமது அங்கத்தவர்களின் எண்ணிக்கையை பாதுகாப்பதற்காக அவர்களின் திருமண விடயத்தில் இறுக்கமான கட்டுப்பாட்டை இடமாலிருப்பதும் இந்த சீர்திருத்த விடயத்தல் ஒரு தொய்வை உண்டுபண்ணுகிறது.
ஆனால் சீதனம்/கைக்கூலிக்கெதரான பிரச்சாரத்தில் இவ்வமைப்புக்கள் தங்களால் இயன்றவரை ஈடுபட்டும் இத்தகைய ‘தமது அமைப்பின் உள்ளார்ந்த கட்டமைப்பில் அங்கத்தவர்களிடையே சீதனம்/கைக்கூலி தொடர்பான ஓர் ஒழுங்கின்மை’ என்ற விடயத்தினால் காத்தான்குடியில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்குமுன்னர் அமைப்புக்கள் தங்கள் அங்கத்தவர்களிடதில் ஒரு முன்னேற்றகரமான மாற்றத்தைக் கொண்டுவருவது கடினமாகவிருக்கிறது.
ஆனாலும் வெறுமனே தொழுகை போன்ற ஆன்மீக நடவடிக்கைகளில் மட்டுமே பிரச்சாரம் பண்ணி சமூகமாற்றம், சீர்திருத்தம் போன்ற விடயங்களில் தங்கள் அங்கத்தவர்களின் சிந்தனைத் திறனையும் செயற்பாட்டுணர்வையும் கட்டுப்படுத்தி சமூக பிரக்ஞையற்று தமக்காகவே வாழும் ஒரு கூட்டத்தை உருவாக்கிக்கொண்டிருக்கும் அமைப்பை விதிவிலக்காகக் கருதி அவர்களைவிட்டுவடுவதுதான் இவ்விடத்தில் சாலப்பொருத்தமெனக் கருதுகிறேன்.
அடுத்த மெயிலில் தொடர்கிறேன்.

வஸ்ஸலாம்
அபூ ஷாறத்
குறிப்பு -(எமது காலத்தின் நுண்ணிய முரண்பாட்டின்
வடிவாய்த் தொடரும் சீதனம் பற்றிய இப்பதிவானது
காத்தான் குடிக் குழுமத்தில்
சகோதரர் ரம்சீன் நளீமி அவர்களால்
வரையப்பட்டது ).

Read Full Post »