Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கல்வி’ Category

2009 ஆம் ஆண்டு நிறைடைவதற்குள் தரம் 06 தரம் 10 வரையான சகல மொழி மூல பாட நூல்களையும் இணையத் தளத்தில் உள்வாங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

முன்னர் இணையத்தளத்தில் ஆங்கில மொழி மூலம் தரம் 7 ற்கான வரலாறு கணிதம், விஞ்ஞானம் ஆகியவையும் தரம் 8 ற்கான சிங்கள மொழி மூலம் இஸ்லாம், பெளத்தம், கிறிஸ்தவம், இலக்கியம், சிங்கள மொழி, கணிதம், விஞ்ஞானம், வரலாறு, புவியியல், சுகாதாரம், வாழ்க்கைத் தர மேம்பாடு, குடிசனவியல், உடற் பயிற்சி போன்வற்றிற்கான பாட நூல்களும் இணையத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழி மூலம் – தரம் 8 ற்குரிய பாடநூல்களும் இணைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இது தவிர கடந்த கால தேசிய பரீட்சைகளின் கடந்த கால வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள் அடங்கிய களஞ்சியமொன்றையும் இணையத்தளத்துக்கு உள்வாங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

(காத்தான்குடி தினகரன் நிருபர்)

Read Full Post »

2009ஆம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரண தர பரீட்சைகள் இன்று 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இப்பரீட்சைகள் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடை பெறுகிறது.

நாடு முழுவதும் – 4098 நிலையங்கள்
5,56,714 பரீட்சார்த்திகள்
1,39,875 தனிப்பட்ட
4,05,257 பாடசாலை
70,000 பணியாளர்கள்
519 இணைப்பு நிலையங்கள்
மீளக்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு
3 விசேட நிலையங்கள்.

நிவாரணக் கிராமம் – 51 நிலையங்கள்
4944 பரீட்சார்த்திகள்
726 பணியாளர்கள்
சரணடைந்தவர்கள் – 3 விசேட நிலையங்கள்
432 பரீட்சார்த்திகள்

– thinakaran –

Read Full Post »