Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஒக்ரோபர், 2009

kathankudi-300s
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலுள்ள அரச மரத்திற்கு முன்பாக புத்தர் சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இதனையொட்டி நாவற்குடாவிலிருந்து பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமொன்றும் நடைபெற்றது. பொலிஸ், இராணுவம் உட்பட பாதுகாப்பு தரப்பினரும்,பௌத்த பிக்குமார்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.

– muslimguardian –

Read Full Post »

புனித ஹஜ் கடமையை நிறை வேற்றச் செல்லும் முதலாவது இலங்கை ஹஜ் யாத்திரிகர் குழு இன்று மக்காவுக்கு பயணமாகிறது.

முதலாவது ஹஜ் குழுவில் சுமார் 50 பேர் செல்லவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக் களம் தெரிவித்தது.

இம்முறை இலங்கையில் இருந்து 5800 யாத்திரிகர்கள் புனித ஹஜ் கட மையை நிறைவேற்றுவதற்காக செல்ல உள்ளனர்.

ஹஜ் யாத்திரிகர்களை உத்தியோ கபூர்வமாக வழியனுப்பிவைக்கும் வைபவம் நவம்பர் முதலாம் திகதி காலை 10.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெறும்.

அன்றைய தினம் 210 யாத்திரிகர்கள் மக்கா செல்ல உள்ளனர்.
– thinakaran –

Read Full Post »

பூமி வெப்பமாதலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் எடுத்திடாவிட்டால், கோடிக்கணக்கான குழந்தைகள் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 2 கோடியே 50 லட்சம் குழந்தைகள் 2050 வாக்கில் பட்டினிச்சாவுக்கு உள்ளாவார்கள் என்று உலக உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

உலக வங்கி மற்றும் ஆசியன் வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் துணை அமைப்பாக இருந்து செயல்படும் உலக உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையம் (ஐஎய்பிஆர்ஐ) பூமி வெப்பமாதலால் விவசாய உற்பத்தியில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டது. இந்த அறிக்கையில், உலக நாடுகள் பூமி வெப்பமாதலுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், உலகில் வாழும் குழந்தைகள் தற்போது எடுத்துக்கொள்ளும் உணவை விட மிகவும் குறைவாகவே 2050இல் எடுத்துக்கொள்ளும் என்றும், அதனால் அவை பட்டினிக் கொடுமைக்கு உள்ளாக நேரிடும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா, உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் குழந்தைகள் பட்டினிச்சாவிற்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக உணவுப் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா. ஸ்தாபனம், நவம்பரில் உச்சி மாநாடு ஒன்றை நடத்திடத் திட்டமிட்டுள்ளது. ஆயினும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், உலகின் உணவு உற்பத்தி மிகவும் நெருக்கடியில் இருப்பதாகவும், இதனைச் சரிசெய்திட தொழில்மயத்தில் வளர்ந்த நாடுகள் முன்வர வேண்டும் என்றும், உலக வங்கியும் மற்ற அமைப்புகளும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

உணவுப் பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதால், மக்களின் வாங்கும் சக்தி கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கின்றது. உலகின் பல பகுதிகளில் மழை பொய்த்துப் போயிருக்கிறது. இதனால் தானிய இருப்பு என்பதும் வெகுவாகக் குறைந்துவிட்டது என்றும் பான் கி மூன் தெரிவித்திருக்கிறார்.

– thenee –

Read Full Post »

haj

இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற மேலதிகமாக 3000 பேருக்கு அனுமதி கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை.எல்.எம். நவவி தெரிவித்தார்.

இலங்கைக்கான அனுமதிக்கப்பட்ட தொகை 2800 ஆகும். இந்த வகையில் கடந்த காலங்களில் இந்த 2800 தொகையை விட மேலதிகமாக மூவாயிரம் தொடக்கம் நாலாயிரம் ஹாஜிகள் வரை சென்று வர அனுமதி கிடைப்பது வழமையாக இருந்தது.

எனினும் இவ்வருடம் உலகில் பன் றிக்காய்ச்சல் உட்பட பல நோய்கள் பரவுவதால் சவூதி அரசாங்கம் ஹஜ் செய்யச் செல்லும் ஹாஜிகளின் தொகையை மட்டுப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்த க்கது. இதன் காரணமாக இலங்கை க்கு 2800ஐ விட அதிகரிக்க முடியா தென சவூதி அரசு குறிப்பிட்டிருந்தது.

எனினும் இத்தொகையை கூட்டித் தரும்படி அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி பலமுறை சவூதி அரேபியா ஹஜ் விவ காரங்களுக்குப் பொறுப்பான அமைச்ச ருடன் தொடர்பு கொண்டதற்கிணங்க மேற்படித் தொகை கிடைத்துள்ளதால் இலங்கை ஹாஜிகள் எந்தவிதமான சலசலப்பும் இன்றிச் செல்ல முடியு மென பணிப்பாளர் தெரிவித்தார்.
– thinakaran –

Read Full Post »

Management Assistant Job Application

management_1

management_2

management_3

further more details on 16/10/2009
Goverment Gazette .

Read Full Post »

SLAS Examination Application

1

2
further more details on 16/10/2009
Goverment Gazette .

Read Full Post »

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்கள் பங்குபற்றும் இந்த வருடத்திற்கான மாகாண மட்ட தமிழ் மொழித்தின போட்டி நிகழ்ச்சிகள் வாகரை மகா வித்தியாலயத்தில் நடாத்தப்படவுள்ளன.

இம்மாதம் 31ம் திகதியும் அடுத் மாதம் 01ம் திகதியும் இரண்டு தினங்களுக்கு போட்டி நிகழ்ச்சிகள்நாத்தப்படவுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் சி.தண்டாயுதபாணி அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் 14 கல்வி வலயங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இந்த போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஏற்கனவே நடைபெற்று முடிவடைந்துள்ள மாவட்ட மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு- திருகோண மலை மாவட்டங்களின் எல்லைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வாகரை மகா வித்தியாலயம் நவீன முறையில் புனரமைப்புச் செய்யப்பட்டு அண்மையில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
– thinakaran –

Read Full Post »

– தடுப்பூசி மருந்துகளை ஏற்றிக்கொள்ளுமாறு கோரிக்கை –

(எம். எஸ். பாஹிம்)

images

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் முதலாவது இலங்கை ஹஜ்குழு எதிர்வரும் 28 ஆம் திகதி மக்கா பயணமாக உள்ளது.

இதேவேளை ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் யாத்திரிகர்களை வழியனுப்பும் உத்தியோகபூர்வ வைபவம் நவம்பர் முதலாம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற உள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை. எல். எம். நவவி தெரிவித்தார்.

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்று வதற்காக இலங்கையில் இருந்து 2800 யாத்திரிகர்கள் மக்கா செல்ல உள்ளனர். இந்தத் தொகையை 5300 ஆக அதிகரிப்பது குறித்து சவுதி அரேபிய அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாக வும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இலங்கை ஹஜ் யாத்திரிகர்களை வழியனுப்பும் வைபவம் ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தலைமையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் சுமார் 300 யாத்திரிகர்கள் மக்கா பயணமாக உள்ளனர்.

இந்த நிகழ்வில் மத விவகார அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இறுதி ஹஜ் குழு நவம்பர் 20 ஆம் திகதி மக்கா செல்லும்.

இலங்கை யாத்திரிகர்களுடன் மூவரடங்கிய மருத்துவ குழுவொன்றும் மக்கா செல்ல உள்ளது. முதலாவது ஹஜ் குழு டிசம்பர் 2 ஆம் திகதி நாடு திரும்ப உள்ளது.

யாத்திரிகர்களுக்கான அறிவுறுத்தல்

உலகில் பரவிவரும் பன்றிக்காய்ச்சல் காரணமாக இவ்வருடம் ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளுக்குச் செல்பவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சவுதி அரேபிய சுகாதார அமைச்சு சில முன் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும், அதனை கட்டாயம் கடைப்பிடிக்குமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்கள், இருதய நோயுள்ளவர்கள், கல்லீரல் நோயுடையவர்கள், சிறுநீரக நோயுடையவர்கள், நீரிழிவு வியாதி உடையவர்கள் மற்றும் ஏனைய கடுமையான நோயுடையவர்கள் உட்பட 65 வயதிற்கு மேற்பட்டவர்களும் 12 வயதிற்கு உட்பட்டவர்களும் இம்முறை புனித ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சவுதி அரேபிய சுகாதார அமைச்சு அனைத்து நாடுகளையும் கேட்டுள்ளது.

மேலும் ஹஜ் உம்ரா கடமைகளுக்குச் செல்பவர்கள் தமக்கு நோய்கள் ஏற்படாதவாறு குறைந்தபட்சம் பயணத்திற்கு ஒருவார காலத்திற்கு முன் Vaணீணீination against ணிலீningoணீoணீணீal ணிலீningitis எனும் பெயருடைய நோய் எதிர்ப்பு மருந்தை ஏற்றிக் கொள்ளுமாறு சவுதி அரேபிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதால் ஹாஜிகள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

சவுதி அரேபிய சுகாதார அமை ச்சின் அறிவுறுத்தல்களுக்கமைய ஹாஜிகள் நோய்த் தொற்றுக்களிலி ருந்து தம்மையும் ஏனையவர்க ளையும் பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் மிகவும் அவதானத்துடன் செயற்படுவதன் மூலம் புனித ஹஜ் கடமையை சிறப்பாக நிறைவேற்ற முடியுமென பணிப்பாளர் தெரி வித்தார்.
– thinakaran –

Read Full Post »

puthinam_com-200
விடுதலைப் புலிகள் ஆதரவு முக்கிய இணையத்தளமான புதினம் திடீரென மூடப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இனிமேல் இவ்விணையத்தளம் இயங்காது என்ற செய்தியை புதினம் வெளியிட்டுள்ளது.

விடுதலை புலிகள் சார்பான புதினம் இணையத்தளம் முல்லைத்தீவில் இறுதிக்கட்ட மோதல்களில் போது போர்க்கள நிலவரத்தை உடனுக்குடன் தரவேற்றம் செய்தது.

மேலும், போரின் கடைசி நாளில் புதினம் தளத்தின் செய்தியாளர் ராணுவத்தின் கடைசி அகோர தாக்குதலுக்கு மத்தியில் சிக்கிய நிலையிலும் கையடக்க தொலைபேசி மூலமாக கொடுத்த கடைசி செய்தி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் புதினம் இணையத்தள முகவரிக்கு போனால், ”தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்” (This is to advise due to personal reasons this website will not be functioning anymore) என்ற தகவல் மட்டுமே உள்ளது.

புதினம் இணையத்தளத்தின் திடீர் மூடல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– வீரகேசரி இணையம் 10/19/2009 –

Read Full Post »

raj_rajaratnam
அமெரிக்காவில் மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட பாரிய நிதி நிறுவன உரிமையாளர் ராஜ் ராஜரத்னம் என்பவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உண்டா என்று அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள். கெலியோன் குவுப் எனப்படும் நிதி நிறுவன ஸ்தாபகரான ராஜ் ராஜரத்னம் உட்பட மேரிலாந்திலிருந்து இயங்கும் தரும நிறுவனம் ஒன்றுக்கு அமெரிக்காவிலுள்ள செல்வந்தர்களான இலங்கையர்கள் பலர் அன்பளிப்பு செய்யும் பணம் விடுதலைப் புலிகளுக்கு போய் சேர்வதற்கு ஆதாரமான பல ஆவணங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களை மேற்கோள்காட்டி வோல் ஸ்ரீற் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னொரு போதும் இல்லாத அளவிலான இந்த பாரிய நிதி மோசடி தொடர்பாக 52 வயதான ராஜரத்னம் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய புலன் விசாரணை பணியகம் தெரிவித்ததாகவும் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

ராஜரத்னமும் அவரது சகாக்களும் தகாத வழியில் 20 மில்லியன் டொலரை சம்பாதித்தனர் என்று வழக்குத் தொடுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜரத்தினத்தின் நியூயோர்க் கேலியொன் நிதி நிறுவனம் 37 பில்லியன் டொலர் முதலீட்டை கொண்டுள்ளது. ராஜரத்னத்தின் சட்டத்தரணி ஜிம் வோல்டன் தமது கட்சிக்காரர் நிரபராதி என்றும் அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்களை அவர் எதிர்த்து வாதாடுவார் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் 2004 ஆம் ஆண்டில் சுனாமி அனர்த்தத்தினால் அழிந்து போன வீடுகளை புனரமைப்பதற்கு ராஜரத்னம் அன்பளிப்பாக நிதி வழங்கியுள்ளார். ஆனால் அவருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதவித தொடர்பும் இல்லை என்று வோல்டன் தெரிவித்தார். நியூயோர்க், புக்ளினில் மத்திய புலன் விசாரணைப் பிரிவினர் நடத்திய பயங்கரவாதத்திற்கு எதிரான மற்றுமொரு விசாரணையில் அமெரிக்காவில் பயங்கரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பொருளுதவி வழங்க முயற்சித்த வேறு 8 பேர் குற்றவாளிகளென ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஆனால் இந்த சம்பவத்தில் ராஜரத்தினமும் அவரது சகாக்களும் தங்கள் பணம் விடுதலைப் புலிகளுக்கு போய் சேர்கிறது என்பதை தெரிந்திருந்தனர் என்று வழக்கு தொடுநர்கள் குற்றம் சாட்டவில்லை. ஆனால் நியூயோர்க் கிழக்கு மாவட்டத்திலுள்ள மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய குற்றவியல் முறைப்பாட்டுப் பத்திரத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகம் என்ற பெயரில் மேரிலாந்திலுள்ள அமெரிக்க தரும நிறுவனத்திற்கு அன்பளிப்பு செய்யப்படும் பணம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கே போய்ச் சேர்கிறது என்று மத்திய புலன் விசாரணை அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு விடுதலைப் புலிகளின் அமெரிக்க பிரிவுத் தலைவர் என்று வழக்குத் தொடுநர்களால் தெரிவிக்கப்பட்ட கருணாகரன் கந்தசாமி என்பவருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் வோல் ஸ்ரீற் பத்திரிகை தெரிவித்துள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற நிறுவனத்திற்கு அன்பளிப்பு செய்தவரது பெயர், “”தனிப்பட்டவர் பி” என்று மட்டுமே நீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட தேடுதலிலிருந்து கண்டு பிடிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் “”தனிப்பட்டவர் பி” என்று குறிப்பிடப்பட்டிருப்பது ராஜரத்தினத்தையே என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களுடன் தொடர்புள்ளவர்கள் கூறியதாகவும் வோல் ஸ்ரீற் ஜேர்னல் தெரிவித்துள்ளது

– thenee –

Read Full Post »

கல்வி அமைச்சு மாகாணசபைகளுக்கு 90 மில்லியன் ரூபா அனுப்பி வைப்பு
மாணவர்களிடம் கட்டணம் அறவிடக் கூடாது

க.பொ.த மாணவர்களுக்கு மாதிரிப் பரீட்சை

(கே. அசோக்குமார்)

அரசாங்க பாடசாலைகளில் 2009ம் ஆண்டுக்கான மூன்றாந்தவணைப் பரீட்சைகளை நடத்துவதற்கென கல்வி அமைச்சு 90 மில்லியன் ரூபாவை மாகாண சபைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

பாடசாலை மட்டத்தில் வலய மட்டத்தில் இம்முறை நடைபெறவு ள்ள மூன்றாந்தவணை பரீட்சைக்கென மாணவர்கள் எவரும் பணம் செலு த்த வேண்டியதில்லை என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

அத்துடன் பரீட்சைக்கென மாணவர் களிடம் கட்டணம் அறவிட வேண் டாம் என்றும் கல்வி அமைச்சு தெரி விக்கிறது. சில மாகாண சபைகளும் இப்பரீட்சைக்கென நிதி ஒதுக்கியுள் ளதுடன் கல்வி அமைச்சின் வேண்டு கோளுக்கு இணங்க 3ஆம் தவணைப் பரீட்சை நடத்துவதற்குரிய செலவினம் தொடர்பான மதிப்பீடுகளை கல்வி அமைச்சுக்கு மாகாண சபைகள் அனுப்பி வைத்துள்ளன.

அத்துடன் இம்முறை க.பொத. சாதாரண தர பரீட்சையை முன்னி ட்டு பாடசாலை மாணவர்களுக்கும் மாதிரி பரீட்சையும் நடத்தப்படவுள் ளது. நவம்பர் 6ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இப்பரீட்சைகள் நடைபெறும்.

மூன்றாம் தவணைப் பரீட்சையாக ஆண்டு 6 தொடக்கம் 10ஆம் ஆண்டு வரை மாணவர்களுக்குரிய பரீட்சை நவம்பர் 17 தொடக்கம் 30ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

தவணைப் பரீட்சைகளை ஏற்பாடு செய்வதற்கென நியமிக்கப்பட்ட விசேட குழுவினதும், தேசிய கல்வி ஆணைக்குழுவினதும் அறிக்கையின் பிரகாரம் மாகாண அதிகாரிகளின் ஒப்புதல்களுடன் பரீட்சையை இவ் வாறு நடத்துதென முடிவு செய்ய ப்பட்டுள்ளது.

மாகாண ரீதியில் ஒருங்கிணைப்பு களை மேற்கொள்வதற்கென கல்வி அமைச்சில் 9 பணிப்பாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர்.

பாடசாலைகள் மற்றும் பாடசா லைகள் தொகுதி (சிறிய பாடசாலை களுக்கான பிரதான பாடசாலையு டன் இணைந்து அடிப்படையில் பரீட்சைகளை ஒருங்கிணைப்பதற் கென அதிபர்கள் மற்றும் பிரபல்ய மான ஆசிரியர்களை உள்ளடக்கியதாக கமிட்டியொன்றும் நியமிக்கப்பட்டு ள்ளது என்றும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.
– thinakaran –

Read Full Post »

யஹியா வாஸித்-
belgium
ஐரோப்பாவில் பெல்ஜியம் என்ற ஒரு குட்டி நாடு இருக்கின்றது. பிறஸ்ஸல்ஸ் இதன் தலைநகரம். இந்த நாடு சில வருடங்களுக்கு முன் பொருளாதார மந்த நிலை காரணமாக ஒரு குட்டி திட்டம் தீட்டியது. ஆம். வெளிநாட்டு முதலீட்டாளர்களையும், உலகில் ஆங்காங்கே பரவியுள்ள பெல்ஜியம் நாட்டவர்களையும் அழைத்து நமது நாட்டில் முதலிடச் செய்வோமே என கங்கணம் கட்டினார்கள். சரி எவ்வாறு இவர்களை தொடர்பு கொள்வது. எவ்வாறு இவர்களை அழைப்பது. உடனே தங்கள் நாட்டிலுள்ள புத்திஜீவிகளையும், வியாபார ஆர்வலர்களையும் அழைத்தார்கள். பேசினார்கள். திட்டங்கள் ஏதும் இருந்தால் தாருங்களேன் என்றார்கள். ஈஸி வே. வெரி, வெரி ஈஸி வே அங்கு சொல்லப்பட்டது.

ஆம். உலகெங்கும் நமக்கு எத்தனை தூதுவராலயங்கள் இருக்கின்றது. அந்த தூதுவராலயங்களில் கொமர்ஷியல் டிவிஷன் இருக்கிறதா. ஆம் இருக்கின்றது. சரி அந்த கொமர்ஷியல் டிவிஷனை கொஞ்சம் முடுக்கி விட வேண்டியதுதானே. அது எப்படி கொமர்ஷியல் டிவிஷனை முடுக்கி விடுவது, என்ற மறு கேள்வி கேட்காமல் கொமர்ஷியல் டிவிஷன்களை முடுக்கி விட்டார்கள்.

பிளான்டர்ஸ் இன்வெஸ்ட்மென்ட். பெல்ஜியத்தின், கடற்கரை அருகில் அமைந்த ஒரு பகுதியில் யாரும் எவரும், இன்வெஸ்ட் பண்ணலாம். 18300 யுரோ உங்களிடம் இருக்கின்றதா. வாருங்கள் வந்து முதலிடுங்கள் என கதவுகளை திறந்தார்கள். ஒரே நாளில் வங்கிகணக்கு, முதலீட்டுபத்திரங்கள், கம்பனி ரெஜிஸ்ரேஷன் என செய்து கொடுத்தார்கள். கிட்டத்தட்ட ஐந்து லட்சம் முதலீட்டாளர்கள் படையெடுத்தார்கள். பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மில்லியன், பில்லியன் யூரோ என முதலிட்டாளர்கள். சிக்கன் சொப், ரெஸ்ட்ரூரண்ட் தொடக்கம் கப்பல் கட்டும் கம்பனி, பாரிய ஜெனரேட்டர் கம்பனி என பல ஆயிரம் கம்பனிகள் தொடங்கப்பட்டன. இன்று பெல்ஜியம் சீனா, இந்தியாவுக்கு அடுத்ததாக பொருளாதாரத்தில் கொடிகட்டிக் கொண்டிருக்கின்றது.

கொமர்ஷியல் டிவிஷன் ஊடாக என்ன மந்திரம், மாயவித்தை செய்தார்கள்.

ஒவ்வொரு நாட்டிலுமுள்ள பெல்ஜியம் எம்பஸிக்கு வரும் வாடிக்கையாளர்களின் ( விஸா, கடவுச் சீட்டு, வர்த்தகம், அரசியல், பொருளாதார கருத்தரங்குகளுக்கு வருபவர்கள் ) விலாசம், டெலிபோன், ஈமெயில் அட்ரஸ்களை தொகுத்து, தினமும், அல்லது வாரத்துக்கொரு முறை பிளான்டர்ஸ் இன்வெஸ்ட்மென்ட் சம்பந்தமான தகவல்களை அனுப்பினார்கள்.

கொமர்ஷியல் டிவிஷனூடாக அவ்வவ் நாடுகளிலுள்ள பத்திரிகைகளில் சிறு, சிறு விளம்பரங்கள் செய்தார்கள். அத்துடன் சிறு, சிறு கருத்தரங்குகள் வைத்தார்கள்.

தங்கள் நாட்டிலுள்ள உற்பத்தியாளர்களை இனம்கண்டு, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தங்களது கொமர்ஷியல் டிவிஷன் ஊடாக கண்காட்சிகள் நடாத்தி, தங்களது நாட்டில் இப்பொருட்களின் உற்பத்தி செலவு மிகமிக குறைவு என நிரூபித்தார்கள்.

அந்தந்த நாட்டிலுள்ள தங்கள் நாட்டவர்களை அழைத்து, நீங்கள் வேலைசெய்யும் நிறுவனங்கள் எதுவாயினும், தலைமையதிகாரியை தொடர்பு கொண்டு எங்கள் நாட்டில், இப்பொருளை உற்பத்தி செய்வது இலகு, அப்பொருளுக்கு வரிவிலக்கு இருக்கின்றது, அழகான ஈஸீயான கப்பல் துறையிருக்கின்றது என்பதை புரிய வையுங்கள். அப்படி அவர்கள் முதலிட்டால் உங்களுக்கு சன்மானங்கள் வழங்கப்படும் என ஒரு ஆலோசனையை வழங்கினார்கள்.

ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தூதுவராலயங்களில், பிளான்டர்ஸ் இன்வெஸ்ட்மென்ட் என ஒரு பிரிவை அமைத்து, அந்த நாட்டிலுள்ள முதலீட்டாளர்களை கவர வழிஅமைத்தார்கள். ( சிறிலங்காவில் கொழும்பு ஹைலெவல் ரோட்டில் இதற்கென அலுவலகம் திறந்துள்ளார்கள் )

பிளான்டர்ஸ் இன்வெஸ்ட்மென்ட்டுக்கென ஒரு அலுவலகத்தை பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் திறந்து துடிப்பான நாட்டுப்பற்றுள்ள இளைஞர்களை வேலைக்கமர்த்தினார்கள்.
அத்துடன் சைனாவைச் சேர்ந்த பல இளைஞர்களை வேலைக்கமர்த்தி சைனாவிலிருந்தே முதலீட்டாளர்களை பெல்ஜியத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

சிறிலங்கா பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது, நமது நாட்டின் அபிவிருத்தியை 2011 ஆகும் போது 5வீதத்தால் உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தான், சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கியதாக, அந்நிதியத்தின் சிறிலங்கா விவகார தலைவர் பிரயன் எயிட்கென் கூறியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் கடந்த வருடம் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாகவும், 50க்கு அதிகமான ஆடைஉற்பத்தி, கட்டுமானத்துறை, வெப்ப ஆடை, சீமெந்து உற்பத்தி, இரத்தினக் கல் ஏற்றுமதி, நிதி முகாமைத்துவ நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கசிகின்றன.

இவற்றையெல்லாம் நோக்கும் போது யுத்தத்தில் செலுத்திய கவனத்தினால் பொருதாரத்தில் கவனம் செலுத்தவில்லையோ என எண்ணத் தோன்றுகின்றது. இராணுவம்தான் அந்த வேலையை பார்த்துக் கொண்டதே. அப்படியானால் பொருளியல் நிபுணர்கள் என்ன செய்தார்கள். அவர்களுக்கு அதற்குரிய நிதி ஒதுக்கப்படவில்லை. அல்லது கஜானா காலி.

இனியாவது ஒரு விதி செய்வோம். உலகம் முழுதும் கிட்டத்தட்ட 53 தூதுவராலயங்கள் சிறிலங்காவுக்காக இயங்குகின்றன. அவைகளில் உள்ள கொமர்ஷியல் டிவிஷன் ஊழியர்களை யுத்த முஸ்தீபுகளுடன் இயக்க வேண்டும். எமது கொமர்ஷியல் டிவிஷன் அதிகாரிகள் ரொம்ப வீரியமானவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் முழுக்க முழுக்க இயங்குவதற்குரிய பண பலம் போதாது என்பதை பல நாட்டிலுமுள்ள கொமர்ஷியல் டிவிஷன்களையும் பார்க்கும் போது புரிகின்றது. அவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். யுத்தகாலத்தில் இராணுவத்துக்கு எவ்வாறு சுதந்திரம் வழங்கப்பட்டதோ அதைவிட ஒரு படி மேலே போய் அவர்களுக்கு உதவிகளும், ஆலோசனைகளும், ஆலோசகர்களும் வழங்கப்பட வேண்டும்.

இன்று புலம் பெயர் நாடுகளில் உள்ள எம்மவர் டுபாய், கட்டார், பஹ்ரெய்ன் என அரபு நாடுகளிலும், நைஜீரியா, தன்சானியா, மடகாஸ்கார் போன்ற ஆபிரிக்க நாடுகளிலும் போய் முதலிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஏன். அவர்களால் நமது நாட்டில் முதலிட முடியாதா. விளம்பரம் போதாது. அதற்கு முதல் வேலையாக அரசு ஒவ்வொரு நாட்டிலுமுள்ள தனது கொமர்ஷியல் டிவிஷன்களுக்கு கொஞ்சம் பணத்தை அள்ளி வீசி முதலில் நம்மவர்களை கவர்வதுதான் ஒரே வழி.

அரபுநாடுகளில் உள்ள நம்மவர்களுக்கும், அங்குள்ள கொமர்ஷியல் டிவிஷன்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கின்றது. ஆனால் இந்திய தூதுவராலயமோ, கொமர்ஷியல் டிவிஷன் ஊடாக அரபிக்களை தட்டி எழுப்பி பெங்களூர் ஐரி பார்க்கிலும், கல்கத்தா இன்டஸ்ரியல் எஸ்டேட்டுகளிலும் முதலிட வைத்துள்ளார்கள். ஏன் இது எம்மால் முடியாதா. முடியும். ஆனால் நாட்டின் இன்றைய தளபதியான நீங்கள் இதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

தடம் பார்த்து நடப்பவன் மனிதனல்ல.
தடம் பதித்து நடப்பவன்தான் மனிதன்.

( தொடருவேன்….)

17-10-2009
– thenee –

Read Full Post »

wfdk_jpg
உலகம் முழுவதும் சுமர் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது.

வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும், இதற்காகப் பள்ளிக்கு அனுப்புதல், உடைகள் வாங்குதல், அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாகவும் ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில்,

“உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இதில் 20 நாடுகள் ஆபிரிக்காவைச் சேர்ந்தவை.

உலக அளவில் 2015ஆம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும், இந்த எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

somaia200
தற்போது பட்டினியால் தவிக்கும் 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும்.

உணவு கிடைக்காமலும், போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது.

உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.

சோமாலியாவில், வன்முறையும், உள்நாட்டுப் போரும் அந்நாட்டை உருக்குலைத்து விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, மோதலில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்நாட்டில், ஒரு குடும்பம், தனக்குத் தேவையான உணவு, குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலராக இருந்தது. அது செப்டம்பர் மாதம் 171 டொலராக உள்ளது.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும், உடைகள் வாங்குவதையும் சோமாலியா மக்கள் கைவிட்டு நெடுநாட்களாகி விட்டன. பலர் கிடைக்கின்ற உணவைச் சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்நாட்டில், சத்தான உணவு கிடைக்காததால், ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.

ஆபிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆபிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது.

கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர்.

உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது.

விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழந்து போய் விட்டது.

1980ஆம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006இல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால்அது போதுமானதாக இல்லை.

உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதுமே பட்டினிச் சாவுக்குள்ளாகி விடும். இதை எவராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.

உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆபிரிக்க கண்டமாகும்” என்றார்.
– வீரகேசரி இணையம் 10/16/2009 –

Read Full Post »

உலக முஸ்லிம் உம்மத்தின் உள்ளங் களில் யாரும் அடைய முடியாத இடத்தை அடைந்துள்ள அல்லாஹ்வின் இறைத் தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது முஸ்லிம்கள் அளவு கடந்த அன்பை வைத்துள்ளார்கள். இந்த அன்பை வெளிப்படுத்த அல்லாஹ் எமக்கு ஒரு வழியைக் காட்டியுள்ளான்.

அது தான் அவர்களுக்காக அல்லாஹ் விடம் அருளை வேண்டக் கூடிய ஸலவாத்தை மொழிவதாகும். அல்லாஹ் இந்த நபிக்கு அருள்புரிகிறான். வான வர்கள் அவர்களுக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண் டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!” அல்குர் ஆன் (3:56).

இந்தக் குர்ஆன் வசனப்படி அல்லா ஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம் சொல்ல வேண்டும். என்ற கட்டளை எம்மீது பிறப்பிக்கப்படுகின்றது. அதற்காக நமது சொந்த வார்த்தை களைக் கொண்ட புகழ்மாலை தொடுப் பது யூத கிaஸ்தவர்கள் செய்த செயலு க்கு ஒப்பாகிவிடும்.

அது சிர்க் என்ற பெரும் பாவத்தில் எம்மைச் சேர்த்து விடும். எனவே தான் மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித் தோழர் கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபி (ஸல்) அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள முற்படலாயினர்.

நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ் வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் சொல்வது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி?” என நபித் தோழர்கள் கேட்ட னர். அதற்கு அவர்கள், “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமாஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம் இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்ம தின் வஅலா ஆலி முஹம்மதின் கமாபாரக்த அலா ஆலி இப்ராஹீம் இன்ன ஹமீதும் மஜீத் என்று சொல்லுங்கள்” என்பதில் அளித்தார்கள்.

அறிவிப்பவர்: கஅப்பின் உஜ்ரா (ரலி). நூல்: புகாரி 4797.

“எங்கள் தொழுகையில் நாங்கள் எவ்வாறு ஸலவாத் சொல்வது?” என நபித் தோழர்கள் கேட்டபோது நபி (ஸல்) இவர்கள் இந்த ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்ததாக முஸ்னத் அஹ்ம தில் ஹமீஸ் (16455) இடம் பெற்றுள்ளது. தொழுகை அல்லாத நேரங்களில் “ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்” என்றோ “ஸல்லல்லாஹு அலா முஹம்மது வஸல்லம்” என்றோ கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதன் (பார்க்க): (நஸயீ: 2728)

“யார் அல்லாஹ்விடம் என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆச் செய்கின்றாரோ அவர மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இவர்கள் கூறுகின்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) – முஸ்லிம்: 577 அதான் சொல்லப்படும் போது முஅத்தின் கூறுவது போல் நாமும் கூறி அதன் இறுதியில் நபி (ஸல்) அவர் கள் மீது ஸலவாத்தும் அவர்களுக்காக வkலா வேண்டி பிரார்த்தனையும் செய்பவருக்கு மறுமையில் நபி (ஸல்) அவர்களின் ஷஃபா அத் உறுதி யாகிவிட்டது.

என முஸ்லிமில் பதிவாகி யுள்ள அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அறிவிக்கும். ஹதீஸ் தெரிவிக்கின்றது. மறுமை நாளில் நபிகளாரின் பரிந்து ரைக்காக மக்கள் ஏங்கும்போது அந்தக் பரிந்துரையைப் பெற்றுத்தரும் சாதனை யாக இந்த ஸலவாத் இமைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்களில் மிகச் சிறந்த நாளாகிய வெள்ளிக்கிழமைகளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள்.

உங்க ளது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களு க்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர் களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது “நிச்சயமாக அல்லாஹ் நபிமார் களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்துவிட்டான் என பதில் அளித்தார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி), நூல்: அபூதாவூத் – 883.

“நிச்சயமாக பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்து ரைக்கின்றார்கள்” என்று நபி (ஸல்) இவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ்வின் மஸ்ஊத் (ரலி) நூல்: நஸயீ 1265

எனவே நாமும் அல்லாஹ்பின் அருளை அள்ளித் தரும் ஸலவாத்தை அதிகமதிகம் தினந்தோறும் கூறி அவனின் அளப்பரிய நன்மைகளை அடைந்து கொள்ள முயற்சிப்போம். அதற்கு இறைவன் எமக்கு அருள்பாளிப்பானாக!

– thinakaran –

Read Full Post »

அக்கினி இடித் தாக்கம்
அசுர வல்லமை ஊக்கம்
அப்படிப் பொறுமை யற்ற புயலினிலே
புதுநெறி படைக்க வேண்டி
புறப்படும் எமது கனவுகள்.
kalam

இன்று டாக்டர், பாரத ரத்னா, பாரத விபுசன், ராக்கெட் பிதாமகன், கவிஞர், அனு விஞ்ஞானி அபுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாமுக்கு எழுபத்தெட்டாவது பிறந்த தினம்.

(இன்று உலக மக்கள் தங்கள் கைகளை கழுவும் தினமும் கூட உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்படி ஆண்டுக்கு 35 இலட்சம் குழந்தைகள் தங்கள் ஐந்தாவது பிறந்த தினம்வரை உயிருடன் வாழ்வதில்லை இந்தக் குழந்தைகள் வயிற்றொட்டம் மற்றும் நிமோனியா போன்றவற்றால் இறந்து விடுகின்றன காரணம் சாப்பிடு முன்பும் மற்றும் மலம் கழித்த பின்னரும் நன்றாக கைகளை சவர்காரத்தால் கழுவாமையாளாகும் என்கிறது அந்த நிறுவனம்.)

“கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது.

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.” என்று தன்னம்பிக்கையூட்டும் குரல்.

எளிமை, வலிமை, திறமை, முதிர்ச்சி, ஆராச்சி, ஆளுமை, வீரம், விவேகம், மதிப்பு என்பவைகளையெல்லாம் உலகத்து மக்கள் இவரிடம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள மதராசு மாநிலத்தின் (1967ம் ஆண்டுக்குப் பின் தமிழ் நாடு) தெற்கிலுள்ள ராமேஸ்வரத்தின் மசூதி தெரு (பள்ளிவாயல் வீதி) வில் அக்டோபர் மாதம் பதினைந்தாம் திகதி 1931ம் ஆண்டு ஆஸியா உம்மா அபுல் பக்கீர் ஜெய்னுலாப்தீன் குடும்பத்தினருக்கு மகனாக பிறந்தார். பிள்ளைக்கு பெற்றோர் இட்ட பெயர் அப்துல் கலாம் (அரபி மொழியில் ‘அப்வ்து’ என்றால் கடவுளின் அடிமை என்றும் ‘கலாம்’ என்றால் பேச்சு அல்லது வார்த்தை என்றும் பொருள்.) “அடிமையின் வார்தை” என்று இதற்குப் பொருள்.

அங்குள்ள ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். திருச்சி ஸெயின்ட் ஜோஸ·ப் கல்லூரியில் விஞ்ஞான அடிப்படைக் கல்வியைக் கற்றவர். தனது சிறப்புப் பொறிநுணுக்க டாக்டர் பட்டப் படிப்புச் சென்னை பொறியியல் துறைக் கல்லூரியில் [Madars Institute of Technology] சேர்ந்து (1954-1957) விமானவியல் எஞ்சினியரிங் துறையை [Aeronautical Engineering] எடுத்துக் கொண்டார். பட்டப் படிப்பின் போதே பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் [Hindustan Aeronautics Ltd] பயிற்சிக்குச் சேர்ந்தார். அங்கே விமானங்களை இயக்கும் பிஸ்டன் எஞ்சின், டர்பைன் எஞ்சின், ஆர அமைப்பு எஞ்சின் [Piston, Turbine & Radial Engines] ஆகியவற்றில் அனுபவம் பெற்றார்

இன்று உலகில் பலதரப்பட்ட மதம்கள், மார்க்கம்கள், மொழிகளை பேசும் மக்களுடன் ஆத்திகர்கள், நாத்திகர்கள், துறவிகள் என பல தரப்பார் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு விடயத்தை ஒத்துக் கொள்பவர்களாகவே இருக்கிறன்றனர் அது இந்த உலகை இயக்க ஒரு சுப்பர் பவர் உண்டு என்பதாகும். அதை மதமாக பின்பற்றுபவர்கள் கடவுள், இறைவன், இயசு, அல்லாஹ், சிவன் என பல பெயர்களிலும் நாத்திகர்கள் நீங்கள் சொல்லும் கடவுள்களை நாங்கள் நம்பவில்லை அவைகளை விட்டு அவர் புனிதமானவர் என்றும் ஏதோ ஒரு வடிவத்தில் அல்லது பெயரில் ஏற்றுக் கொள்கின்றனர்.

இதனாலோ என்னவோ அப்துல் கலாம் என்ற பெயரிடப்பட்ட இந்தக் குழந்தையும் உலக மக்கள் அனைவராலும் ஹிரோவாக பின்நாட்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இளைஞர்களுக்கு ஒரு தூண்டுகோளானார், இந்திய இளைஞர்கள் மத்தியில் இருந்து வந்த கல்விகற்ற புத்திசாலிகள் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற மோகத்தை துடைத்தெரிந்து தாய் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதை வேரூண்டச் செய்தார்.

படிக்கும் மாணவர்களுக்கும் உழைக்கும் இளைஞர்களுக்கும் விளையாடும் குழந்தைகளுக்களையும் கனவு காணச் சொன்னார். இந்தியாவின் வளர்ச்சியிலும் அது தன்னகத்தே கொண்டுள்ள செல்வங்களிலும் அதிகம் நம்பிக்கை கொண்டவர் இவர்.

பாரதியையும் பாரதிதாசனின் தன் ஆத்மார்தமாக கொண்டார் மில்டனும் ரவிந்திரநாத் தாகூரும் அவரால் அதிகம் நேசிக்கப் பட்ட கவிஞர்கள். வாழ்கையின் இளம் பிராயத்திலேயே அம்மாவிடம் இருந்து கருணையையும் அப்பாவிடமிருந்து நேர்மையையும் கற்றுக் கொண்டார்.

அவர் எழுதிய அக்கினிச் சிறகுகள் ( The wings of Fire) புகழ் பெற்ற ஒரு சுயசரிதை அதில் தனது சாதனைக்கு பக்கபலமாக இருந்த விஞ்ஞானி சத்தீஸ் தவானைப் பற்றி எழுதிய வரிகள் இவரின் குணத்திற்கும் அவரின் குருவிற்கும் பெருமை.

“1979ம் ஆண்டு எஸ்.எல்.வி. ராக்கெட் பரிசோதனைக்காக அத்தனை பேரும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தோம். நான் அந்த ப்ராஜெக்டின் இயக்குநர். பிரதமரில் இருந்து ராணுவ அமைச்சர் வரை நாட்டின் எல்லோருடைய கவனமும் அந்த ராக்கெட் மீதே இருந்தது.

ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஒன்று, இரண்டு என்று சில கட்டங்களை நாங்கள் வகுத்துக் கொடுத்தபடி ஒழுங்காகச் சென்ற ராக்கெட் அதற்கு மேல் தடுமாற ஆரம்பித்து கடலில் விழுந்து படுதோல்வி அடைந்தது. அப்போது எங்கள் உயரதிகாரியான போராசிரியர் சத்தீஷ் தவான் உடனடியாக பிரஸ்மீட் நடக்கும் இடத்துக்கு வருமாறு எனக்கு அவசரச் செய்தி அனுப்பினார்.

“போச்சு! எல்லோர் நடுவிலும் நம் மானம் கப்பல் ஏறப்போகிறது’ என்று நினைத்துக்கொண்டே போனேன். ஆனால் அங்கு எனக்கு வேறுவிதமான அனுபவம் காத்திருந்தது. அங்கே நிருபர்கள் பல சங்கடமான, காயப்படுத்தும் கேள்விகளைக் கேட்டனர். அவர்களிடம் என்னையும் என் டீமையும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் சத்தீஷ் தவான். எங்கள் தரப்பு நியாயங்களை புரிய வைத்தார். சுருக்கமாகச் சொன்னால் எங்களுக்கு ஒரு பாதுகாப்பு அரண் போல செயல்பட்டார்.

சில கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் அதே பரிசோதனை. இப்போது எஸ்.எல்.வி.3 வெற்றிகரமாக ரோகிணி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் முதல் பெரிய வெற்றி அது. எல்லோரும் ஆனந்தக் கூத்தாடினோம். சத்தீஷ் தவான் என்னை அழைத்து, “நீயும் உன் டீமும்தான் இந்தச் சாதனைக்குக் காரணம். நீ போய் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்து’ என்று அனுப்பி வைத்தார்.

கல்லடி வந்தபோது முன்னே போய் தாங்கிக் கொண்டவர், பூமாலை வந்தபோது என்னை முன்வரிசைக்குத் தள்ளியது சிலிர்க்க வைத்தது. ஒரு டீம் லீடர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அவரிடம்தான் கற்றுக் கொண்டேன்.” என்றார்.

தாய் நாட்டின் மீதும் அதனைக் குறை கூறுபவர்கள் மீதும் அதிக கோபம் அவருக்கு அவர் சொன்ன அந்த வார்தைகள் தாய்நாட்டின் மீது குறைகூறுகின்ற நமக்கும் பொருந்தும்

“நமது அரசாங்கம் திறமையற்றது என்று நீங்கள் சொல்கிறீர்கள். நம் திட்டங்கள் பழையவை என்று சொல்கிறீர்கள். நகராட்சிக்காரர்கள் குப்பையை ஒழுங்காக அள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். இந்தியா ஒரு நரகம் என்று சொல்கிறீர்கள். எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். இதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

சிங்கப்பூரில் நீங்கள் இருந்தால், சிகரெட் துண்டைத் தெருவில் எறிய மாட்டீர்கள். துபாயில் இருக்கும்போது ரமலான் மாதத்தில் பொது இடத்தில் உண்ண உங்களுக்கு தைரியம் வராது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து கடற்கரையில் குப்பைத்தொட்டி தவிர, வேறு எங்கும் குப்பையை எறிய மாட்டீர்கள். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் போலிச் சான்றிதழ் வாங்க முயற்சிக்க மாட்டீர்கள்.

இப்படியெல்லாம் வெளிநாடுகளில் ஒழுங்குகளை மதிக்கத் தெரிந்த உங்களால், உங்கள் சொந்த நாட்டின் ஒழுங்குகளை மதிக்க முடியவில்லையே, ஏன்?

ஓர் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க ஓட்டுச் சாவடிக்குப் போவதோடு நம் பொறுப்பை உதறிவிடுகிறோம். நம் பங்களிப்பு எதுவுமே இல்லாமல் அரசாங்கமே நமக்காக எல்லாவற்றையும் செய்து தரவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். அரசாங்கம் சுத்தம் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், நாம் குப்பை போடுவதை நிறுத்தமாட்டோம்.

ஒவ்வொருவரும் நம் நாட்டைத் தவறாகவே உபயோகித்துக் கொள்கிறோம். நமது மனசாட்சி அடகு வைக்கப்பட்டிருக்கிறது.”

காற்றைக் கிழித்து வானில் இந்தியாவிற்கு வேலியமைத்த இந்த ராக்கெட் மகனின் சிறுவயதில் நீங்கள் ராக்கெட் விட்டிருக்கிறீர்களா என்று சன் தொலைக்காட்சிக்காக விவேக் கேட்டபோது

“1931 ம் ஆண்டு தொடக்கம் 1941 ம் ஆண்டுவரை 10 வயது எனக்கு அந்தக் காலத்தில் ராக்கெட்டெல்லாம் கிடையாது ஐயா நான் கோவில் திருவிழாக் காலங்களில் ஆண் பனையின் பூ அது காய்ந்து விழுந்ததை தோட்டத்தில் புறக்கி அதன் ஒரு பக்கத்தில் தீபத்துடன் மத்தாப்பை வைத்து மேலே எறிவேன்” அது ராக்கெட் மாதிரி பறக்கும்” என ஒரு சிறு குழந்தையாக கதை சொன்னார்.

புனிதக் குர்ஆனைக் கறைத்துக் குடித்தவர் அடிக்கடி பகவத் கீதையையும் ஞாபகத்தில் வைத்துப் பேசக் கூடியவர் திருக்குறல் அவருக்கு அத்துப்படி கருணாடக இசை மற்றும் வீணை வாசிப்பதிலும் ஞானி இவர்.

தன்னம்பிக்கையை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஊட்டியதால் அவர்களின் மனதில் ஒரு தீப்பொறியாய் ஆனவர். தீவிரவாதத்தையும் வன்முறையையும் எப்படி மக்கள் எதிர்கொள்வது என்று கேட்கப்பட்டபோது

“எல்லோருக்கும் ஒன்று நான் சொல்ல விரும்புகின்றேன் கெட்ட மனங்கள் ஒன்று சேர்ந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தும்போது நல்ல மனங்கள் ஒன்று சேர்ந்து அதை எதிர்த்து செயற்பட வேண்டும்” என்றார்.

தனது இளம் வயதில் தான் விமானப்படையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்றவுடன் மனமுடைந்த அவர்கள் ரிஷிகேசில் சுவாமி சிவானந்தா அவர்களை சந்திக்கிறார்கள் சுவாமியவர்கள் டாக்டர் அப்துல் கலாமுக்கு கூறினார்கள்

“உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்; விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது. நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை. ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது. நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது. ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு. உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல். உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்! கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”

இந்த நல்ல உபதேசம் இன்றும் டாக்டர் அப்துல் கலாமைப் படிக்கும் ஒவ்வொறுவரும் தங்களுக்கு கூறப்பட்டதாகவே நினைக்கின்றனர்

இலவசமாக உலக மாணவர்களுக்கு பாடம் நடாத்தும் மாமேதை, நாட்டின் தன்மானம் காத்த விஞ்ஞானி, ஜனாதிபதி மாளிகையில் சொந்த செலவில் குடும்பத்தினருக்கு உணவளித்த ஜனாதிபதி, இரண்டு சூட்கேசுடன் வந்து அதே இரண்டு சூட்கேசுடன் ஜனாதிபதி மாளிகையை விட்டுச் சென்ற அரசியல் வாதி.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஏழையாகவே வாழ துணிவு கொண்டவர் இந்தியாவை குறித்து கனவு கண்டவர். அவர் தனது இளம் பயதில் படிப்புச் செலவுக்காக தினசரிப் பத்திரிகை விற்றார். இன்று அவரின் பெயரைப் போட்டால் பத்திரிகைகள் அதிகம் விற்கின்றன.

“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”

தமிழினச் சிந்தனைச் சிற்பிக்கு ஈழத்தமிழ் மக்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல சாதனைகள் புரிந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கின்கின்றோம்.

ஆக்கம்
கிழக்கான் ஆதம்
14.10.2009
http://www.thenee.com

Read Full Post »

Older Posts »