Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘ஆளுமைகள்’ Category

— இலங்கையின் குறிப்பிடத்தக்க முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்களில் ஏபிஎம். இத்ரீஸ் குறிப்பிடத்தக்கவர்.
சில ஆண்டுகளுக்கு முன் பெருவெளியில் சஞ்சிகையில் வெளிவந்த நேர்காணலை இப்போது அவரது இணையத்தில் தொடராக பதிவேற்றம் செய்கிறார்கள். காலப் பொருத்தம் கருதி அரசியல் தொடர்பான இக்கேள்வியை நாம் இங்கு பதிவேற்றம் செய்கின்றோம், காத்தான்குடி நெட்–

இன்றைய முஸ்லிம் அரசியல் நிலை பற்றி உங்களின் பார்வை என்ன?

இலங்கை முஸ்லிம் அரசியல் அண்மைக்காலத்தில் நலிவடைந்தநிலையில் இருப்பதால்தான் பலரும் சொல்கிறார்கள். அதில் உண்மை இருக்கிறது. தென்கிழக்குப் பல்கலைக்கழக எழுச்சிக்குப் பின்னரும் சுனாமிக்குப் பின்னரும் இலங்கை முஸ்லிம் அரசியல் சூழலை நாம் பார்க்கின்ற போது அதன் செல்நெறி மிகவும் நலிவடைந்ததாக, திட்டமிட்டு சூறையாடப்படுவதாகத்தான் நான் உணர்கிறேன். மற்றொரு வகையில் நோக்குகின்ற போது முஸ்லிம் அரசியல் தலைமைகள் சுனாமிக்குப் பின்னரும், மூதூர் பலவந்த ஆக்கிரமிப்பு வெளியேற்றத்திற்குப் பின்னரம் சமூகத்தொண்டு நிறுவனங்களை அல்லது சீர்திருத்த நிறுவனங்களை நோக்கி இறங்கிவந்ததாகத்தான் நான் பார்க்கிறேன். இதை முஸ்லிம் அரசியலை அல்லது கட்சி அரசியலின் பின்னடைவாகக் கொள்கின்ற அதே நேரம் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் எழுச்சியாகக் கொள்ள முடியுமா? என்பது கேள்விக் குரிய விடயம்.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் மக்களின் கைகளுக்குச் சென்றிருக்கிறது என்று சிலர் அவதானிக்கிறார்கள். அதாவது முன்பு ஒற்றைத் தலைமையாக நீக்கமற நிறைந்திருந்த நிலைமாறி அத்தலைமை நிறைவேற்றத் தவறிய, நிரப்பாமல் விட்ட வெற்றிடங்களையும் பணிகளையும் மக்கள் தமது உள்ளுர்தலைமைகள், ஏஜென்டுகளைக் கொண்டு நிறைவேற்ற ஆரம்பத்திருக்கிறார்கள்.

எனினும் முஸ்லிம் கொள்கைவாத அரசியல் இன்னும் சரியாகக் கட்டப்படாத பலவீனமான சூழலில்தான் நாம் இருக்கிறோம். கட்சி அரசியலைத்தான் உண்மையான அரசியல் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறோம். கொள்கைவாத அரசியல் உருவானால்தான் பௌத்த பெருந்தேசியவாத பன்சலையை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியோடு நாம் பேரம்பேசவோ அல்லது சமமாக உட்கார்ந்து எமது விடயங்களை கதைக்கவும் முடியும். அதற்கான அடிக்கட்டுமான வேலைகளை பிற்படுத்தாமல் தொடங்கவேண்டி இருப்பதாக நான் கருதுகிறேன்.

இங்கு முஸ்லிம் கட்சிவாத அரசியல் என்னவென்றால் எங்கள் ராத்தாவின் வீட்டுக்கு முன்னால் ரோட்டுப் போட்டுத்தரனும். அப்படி என்றால் நாங்கள் உங்களுக்கு வோட்டுப்போடுவோம் என்பது. கொள்கைவாத அரசியல் என்பது யாருக்கிட்ட கேட்டு நீங்க பிரிச்சிங்க? பிரிக்கிறதுக்கான அதிகாரத்தைத் தந்தது யார்? இது எங்கள் பாரம்பரிய தாயகம். இதில் இரண்டுபேரும் சேர்ந்துதான் பிரிக்கிறதா? சேர்ந்து வாழ்றதா? என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இந்த இறைமையைப் பேசுவதற்கான இட்டுமையைத் தருவது. இந்தக் கொள்கைவாத அரசியலை காங்கிரஸ் இதுவரைக்கும் செய்யவில்லை. குறி்ப்பாக காங்கிரஸுக்கென்று தொடர்ச்சியான ஒரு கொள்கை விளக்கப் பத்திரிகையோ, துண்டுப்பிரசுரமோ அல்லது ஒலிநாடாவோ பள்ளிவாசலில் ஒரு குத்பா பிரசங்கமோ கூட இல்லை.

மறைந்த தலைவர் அவர்களும் வெகுஜனப் போராட்டங்களாக சிவில் சமூகத்தை உசார்படுத்தக்கூடிய இஸ்லாமிய பண்பாட்டு அம்சங்களைக்கூட அகவயப்பட்ட ஒன்றாகத்தான் மாற்றியமைத்தார். உதாரணமாக நோன்புபிடிக்கச் சொன்னார். இதை வீட்டுக்குள் நோம்பு பிடித்துக் கொண்டிருக்கின்ற உன்னாவிரதத்திற்கு சமமான அம்சமாகத்தான் குறுக்கிப் பார்த்தார். இவற்றை வெகுஜனப் போராட்டமாக கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை எங்களுடைய பண்பாட்டிலிருந்தே நாங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். சிவில் சமூகத்தை உசார் படுத்தலாம். நாடலாவிய ரீதியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஒரு கட்டளை போட்டால் குத்பாவுக்குப் பிறகு ஒரு ஊர்வலத்தை ஒழுங்குபடுத்திச் செய்யலாம். ஆனால் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை ஓட்டுக்காக எங்கள் பிராந்தியங்களுக்கு வந்துபோகின்ற நிலை இருக்கிறதே தவிர ஒரு கொள்கைவாத அரசியலுக்கான உழைப்பு எந்த மட்டத்திலும் இல்லாத நிலைதான் இருக்கிறது.

இதனால்தான் சுனாமிக்குப்பிறகும் தென்கிழக்கு பல்கலைக்கழக எழுச்சிக்குப் பிறகும் முஸ்லிம் அரசியல் வாதிகள் புஸ்வானமாகப் போய்விட்டதாகத்தான் நான் கருதுகிறேன். முந்தி கருணாவுக்கு கப்பம் வாங்கிக் கொடுத்த இடையீட்டாளர்கள் மாதிரி அவர்கள் இப்போது ஏஜென்டு வேலை செய்கிறார்கள். இதற்காக அவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ற சொல்லை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

idrees.lk

Read Full Post »

ரமழான் மாதத்தின் நடுப்பத்து தினங்களிலும் நபி (ஸல்) அவர் கள் பள்ளிவாசலிலே தங்கியிருப்பார்கள். இந்த வருடம் நடுப்பத்து தினங்கள் முடிவடைந்த பின்னரும் பத்து நாட்கள் தங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஓர் இரகசியத்தை பாத் திமா (றழி) கூறுகின்றார்; ஜிப்ரீல் ஒவ்வொரு வரு டமும் எனக்குக் குர்ஆனை ஒருமுறை ஓத நான் அவருக்கு ஒருமுறை ஓதிக் காட்டுவேன். இந்த வருடம் அவர் என்னுடன் இரண்டு முறை ஓதியுள் ளார்கள். எனது நேரம் அண்மித்து விட்டது என் பதை என்னால் உணர முடிகின்றது.

ஷவ்வால் மாதம் முடிந்ததுடன் ஹஜ் கிரியைக்காக இம்முறை நபி (ஸல்) அவர்களே தலைமை தாங்கு வார்கள் என்ற செய்தி மதீனா முழு வதும் அறிவிக்கப்பட்டது. மக்கள் மதீனாவை நோக்கி அணி திரண்ட னர்.

மீள்பார்வை

நபியவர்களின் வாழ்வின் இறுதிக் கணங்களின் தொகுப்பு .

Read Full Post »

கருத்து வேறுபாடுகளைப் படித்தல்

அதாவது அறிஞர்களின் கருத்துவேறுபாடுகளை ஒவ்வொரு இஸ்லாமிய வாதியும் படிக்க வேண்டும். அப்போது அவர்களின் சிந்தனைப் பிரிவுகளையும் அவர்களது அறிவுத்தரங்களையும் இஸ்லாமிய சட்டப் பாரம்பரியத்தையும் சரிவர உணர முடியும். இதனால்தானோ என்னவோ இஸ்லாமிய அறிஞர்கள் சிலர் யார் புகஹாக்களின் கருத்துவேறுபாட்டை அறியவில்லையோ அவன் பிக்ஹின் வாடையைக் கூட நுகரமாட்டான்’ என்றார்கள்.

இத்ரீஸ்.lk இணையத்தில் முழுமையாக வாசிக்க முடியும். மிக அருமையான ஒரு கட்டுரை .
சமுகத்தில் இயங்குகின்ற இயங்க நினைக்கின்ற அனைத்து தஃவா இயக்க அங்கவத்தவர்களும் வாசிக்க வேண்டியது.

Read Full Post »

Read Full Post »