Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மாற்று கல்வி’ Category

‘இஸ்லாமிய சமுதாயம் அமை வது எப்படி?’ என்பது சகோதரி மர்யம் ஜமீலா எழுதிய ஒரு நூல். அதனை 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாம் முறையாக மீட்டி வாசித்தேன். அவர் குறிப்பிட்டுள்ள ஒரு கருத்து என் உள்ளத்தில் தைத்தது.

இஸ்லாமிய மறுமலர்ச்சி முஸ்லிம்களின் ஆதரிவின்றி ஏற்பட முடியாது எனவும் முஸ்லிம் பொது மக்கள் ஈமானின் உயர்ந்த பெறுமா னத்தை விளங்கி வாழ கல்விக் கூடங்களும், கலாசாலைகளுமே பொறுப்பேற்க வேண்டுமெனவும் குறித்துக் காட்டும் அவர், கல்வி எவ்வாறு அமைய வேண்டும் என்ப தைப் பின்வருமாறு குறிப்பிடுகின் றார்.

நமது பாடசாலைகள் அனைத்திலும் அல்குர்ஆன் போதிக்கப்பட வேண்டும். ஆனால், பல பாடங்களோடு மற்றொரு பாடமாகவல்ல. அல்குர்ஆனே பிரதான பாடமாக இருத்தல் அவசியம். மற்றப் பாடங் கள் அனைத்துமே குர்ஆனின் திவ் விய கருத்துக்கு சற்றும் முரண்படா திருத்தல் வேண்டும். அதாவது அல்குர்ஆன் சூரியனைப் போல வும் மற்றப் பாடங்கள் அதனைச் சுற்றிச் சுழன்று வருகின்ற கிரகங்க ளைப் போலவும் இருக்கும். ஏனைய பாடங்கள் யாவையும் குர்ஆனின் விளக்கங்களைத் தழுவியே கற் பிக்க வேண்டும். மதக் கல்வி, மதச் சார்பற்ற கல்வி என்ற பேதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும். (பக்கம்: 27-28)

இஃது இஸ்லாமிய ஆட்சி ஒன்று உருவாக்க வேண்டிய கல்வி முறை யின் ஒருவடிவமாக முன்வைக்கப் பட்டுள்ளது. எனினும் இஸ்லா மிய ஆட்சி நிலவாத முஸ்லிம் நாடுகளும், முஸ்லிம்கள் சிறுபான் மையாக வாழும் நாடுகளும் பரீட் சார்த்தமாகவேனும் இந்த வழி முறையை நடைமுறைப்படுத்திப் பார்க்க முடியும்.
வாசகர் வாசிப்புக்காக பரிந்துரைக்கும் கட்டுரை .

http://meelparvai.net/

Read Full Post »

‘ஆயிஷா’

book_13கல்வி – வாழ்க்கை – அறிவியல் புனைக்கதை

தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.

பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா… இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியை புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.

இன்றும் லட்சக்கானவர்களை கல்வி குற்த்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு, இரா. நடராசனை, ‘ஆயிஷா நடராசன்’ என்றே அறிய வைத்த கதை.

– கணையாழி வழி – ஜெராக்ஸ் எடுத்து பல நூறுபேர் பல ஆயிரம் பேருக்கு வாசிக்க அன்போடு முன்மொழிந்தார்கள்.

– ஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய்க்கு ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் கண்டது.

– நிகர் முதல் வாசல் வரை – 17 அமைப்புகள் ஆயிஷா கதையை தனிநூலாக்கி பரவலாக எடுத்துச் சென்றன.

– அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாய பாடமாக்கப்பட்டது.

– அதைத் தவிர ஏழு தன்னதிகார கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவை பாடமாக வைத்துள்ளன.

– ஆயிஷா மன்றங்கள் என்று மதுரை மற்றும் கோவையில் கிராமப்புற குழந்தைகளால் தொடங்கப்பட்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

http://www.eranatarasan.com/translation2.html

Read Full Post »