Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பூர்வீகம்’ Category

மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான கள்ளியங்காடு எனப்படும் முஸ்லிம் கொலனியில் தமிழ் மக்கள் அத்துமீறிக் குடியேற்றப்பட்டுள்ளதையும், அங்கு அமைந்திருந்த மஸ்ஜிதுல் பிர்தௌஸ் பள்ளிவாசலைப் புனரமைப்புச் செய்ய முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதையும் அப்பள்ளிவாசலின் முன்னாள் தலைவரான ஜனாப் துவான் ஆரிப் சராவுதீன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட காணி ஆணையாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

மேற்படி பள்ளிவாசல் எல்லைக்குள் அத்துமீறிக் குடியிருப்பவர்களையும், அங்கு கட்டிடங்கள் அமைக்கப்படுவதையும் உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறும், அதற்கான தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறும் அவர் மாவட்ட அரசாங்க அதிபரையும், காணி ஆணையாளரையும் கோரியுள்ளார்.

தொடர்ந்து படிக்க …
vaarauraikal

Read Full Post »

சிராஜ் மஷ்ஹூர்

“தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம்” எனும் கருப் பொருளில் தென்கிழக் குப் பல்கலைக்கழக மொழித்துறை தனது முதலாவது உலக ஆய்வு மாநாட்டை ஒக்டோபர் 24 தொடக் கம் 26 வரை நடத்தியுள்ளது.

இதில் இலக்கியம், மொழியி யல், பண்பாடு, வரலாறு, சமூக வியல், நாட்டார் வழக்காற்றியல், நாடகம், நுண்கலை, கல்வி, அரசி யல், பொருளியல், தமிழ் பேசும் முஸ்லிம்களின் மறுமலர்ச்சி போன்ற பல்வேறு விடயப் பரப்பு களில் 90க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட் டுள்ளன.

தென்கிழக்குப் பல்கலைக்கழ கத்தின் இந்த ஆய்வு முயற்சி வர வேற்கப்பட வேண்டிய ஒன்று. பல்கலைக்கழகத்திற்கும் அதனைச் சூழவுள்ள சமூகத்திற் கும் இடையி லான உறவு தொய்வடைந்து கொண்டு வரும் சமகாலத்தில், இவ்வாறான முன்னெடுப்புகள் சாதகமான சமூக உறவாடலுக்கு பெரிதும் பங்களிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆயினும், மாநாட்டின் கருப் பொருளில் பேசப்படும் ‘தமிழ் பேசும் முஸ்லிம் கள்’ என்ற சொல் லாடல் அதிருப்தி அலைகளை எழுப்பியுள்ளது. இந்த உணர் வலைகள் நியாய மானவையே.

ஒரு மக்கள் தொகுதியினர் தம்மை எவ்வாறு அடையாளப் படுத்த விரும்பு கிறார்கள் என்ப திலிருந்தே அவர்களது அடையா ளம் மேலெழுகிறது.

அவர்கள் விரும்பாத அடையா ளக் குறிகாட்டிகளூடாக வெளியி லிருந்து அவர்களை அடையாளப் படுத்த முனைவதை, கருத்தியல் ஆதிக்கத்தின் நுண்ணிய வடிவமா கவே கருத வேண்டியுள்ளது. திணிக்கப்பட்ட அடை யாளங்கள் அரசியல் ரீதியாக வீரியம் இழந் தவை. அறிந்தோ அறியாமலோ கருத்தியல் ஆதிக்கத்தின் கைதிகளாக நாம் மாறிவிடும் அபாயம் ஏற்படுவ துண்டு. இது அதில் எந்த வடிவம்?

இலங்கை முஸ்லிம்கள் தம்மை ‘முஸ்லிம்கள்’ என்றே அடையா ளப்படுத்த விரும்புகின்றனர். ‘தமிழ் பேசும்’ என்ற அடைமொழி அரசியல் ரீதியாக மிகவும் பலவீன மானது. இது குறித்து எண்ணற்ற விவாதங்களும் கருத் தாடல்களும் நடைபெற்றுள்ளதை அனைவரும் நன்கு அறிவர்.

தமிழகத்தில் ‘தமிழ் முஸ்லிம் கள்’ என்ற சொல்லாடலே வழக் கில் உள்ளது. அங்கு கூட ‘தமிழ் பேசும் முஸ்லிம்கள்’ என்று பேசப் படுவதில்லை.

‘தமிழ் பேசும் முஸ்லிம்கள்’ என்ற சொல்லாடலுக்கு இலங்கை அரசியல் சூழலில் குறிப்பான சில அர்த்தங்கள் உள்ளன. இதனை இலங்கைக்கு வெளி யில் உள்ள ஒரு சூழலுக்கு -ஒரு சர்வதேச மாநாட்டுக்கு- பொருத்திப் பார்ப் பது எவ்வளவு தூரம் பொருத்த மானது? இந்த அடிப்படைப் புரி தல் மாநாட்டு ஏற்பாட்டாளர்க ளுக்கு எவ்வாறு தவறிப் போனது?

இலங்கை முஸ்லிம்களுக்கும் தமிழுக்கும் உள்ள உறவு என்ற விடயம் விரிந்த ஆய்வை வேண்டி நிற்கிறது. இலங்கையில் தமிழ் எந் தளவு தூரத் திற்கு முஸ்லிம்களது தாய் மொழியாக உள்ளது? அவர் கள் ஏன் தமிழைப் பேசுகின்றனர்?

இதில் அண்மைக் காலமாக பல விலகல்கள் தோன்றி வளர்ந்து வருகின்றன. குறிப்பாக சிங்கள, ஆங்கில மொழிகளை தாய்மொழி யாகக் கொண்ட புதிய தலைமுறை யின் வருகை முஸ்லிம் சமூகத்துள் மிக வெளிப்படையான யதார்த்த மாக மாறிவருகிறது. இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை மொழி அடையாளத்தின் எல்லை கள் மாறி வருவதையே இது காட்டுகிறது.

இலங்கை முஸ்லிம்களின் அடையாளக் குறிகாட்டியாக சம யமே இருந்து வருகிறது. மொழி யின் அடையாளக் குறிகாட்டல் பண்பு இங்கு சுருங்கி வருகிறது என்பதுதான் யதார்த்தம்.

இலங்கையில் வாழும் மேமன் கள், மலாயர்கள் உள்ளிட்ட பிற முஸ்லிம்கள் தமக்கென்று தனி யான தாய்மொழிகளைக் கொண் டுள்ளனர். எனினும், அவர்களுள் கணிசமானோர் தமிழ்மொழியைப் பேசும் ஆற்றலைக் கொண் டுள்ளனர். இதனை எந்த வகையில் உள் ளடக்குவது? அவ்வாறாயின் இவர் களும் தமிழ் பேசும் முஸ்லிம்களா? இவை விடை காணப்பட வேண் டிய கேள்விகள்.

இந்த வகையில் தமிழ், இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழியா அல்லது இணைப்பு மொழியா என்ற இன்னொரு ஆய்வுப் பிரச்சி னையும் மேலெழு கிறது.

இலங்கையிலேயே இவ்விட யம் பல நுட்பங்களையும் சிக்கல் களையும் கொண்டிருக்குமாயின், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இதனை ஒத்த பல ஆய்வுப் பிரச்சினைகள் மேலெழுவதைத் தவிர்க்க முடி யாது.

இவ்வாறான பலதரப்பட்ட விட யங்களை விரிவாக ஆய்வுக்கும் கவனத்திற் கும் எடுக்காமல் மாநாட் டின் கருப்பொருள் வடிவமைக்கப் பட்டிருப்பது, அதிலுள்ள அரசியல் பார்வையின் பலவீனத்தையே வெளிக்காட்டுகிறது.

அதிலும் குறிப்பாக முஸ்லிம் களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பல்கலைக்கழகத்தி லிருந்து இவ்வாறான பலவீனமான அரசியல் பார்வை யோடு மாநாட் டுத் தலைப்பு வரையறுக்கப்பட்டி ருப்பதுதான் வேதனையளிக் கிறது.

இது மொழித்துறை மாநாடு. ஆதலால் தமிழ் பேசும் முஸ்லிம் கள் என்ற சொல்லாடல் சரி என வாதிட முடியும். ஆனால், மாநாட்டு உள்ளடக்கத்தின் பரப்பை நுணுகி நோக்கினால், அதனுள் ஆழமான சமூகவியல் பார்வை விரவியிருப்ப தைக் கண்டுகொள்ள முடியும்.

அடையாளம் தொடர்பான ஆழ மான பார்வையினூடாக மாநாட்டுக் கருப் பொருள் வடிவமைக்கப் படவில்லை என்பது மனதை இடிக்கவே செய்கிறது. இனிமே லாவது இவ்வாறான தவறுகளைத் தவிர்க்க வேண்டும்.
– meelparvai –

Read Full Post »